எதிரிகளின் விமானதளங்களை தாக்கி அளிக்கும் SAAW ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

இந்தியாவின் DRDO மற்றும் இந்திய விமானப்படை இணைந்து விமான தளங்களை அழிக்கும் ஸ்மார்ட் ஆண்டி ஏர்ஃபீல்ட் ஆயுதத்தை (SAAW) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளன.

இதனை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயற்கைகோள் வழி செலுத்துதல் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் சென்சார்களின் அடிப்படையில் இரண்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரோ ஆப்டிகல் சென்சார் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது ஆகும்.

எலக்ட்ரோ ஆப்டிகல் சீக்கர் அடிப்படையிலான இந்த வகை குண்டுகள் நாட்டிலேயே முதன்முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆயுதம் இமேஜிய் இன்ஃப்ரா-ரெட் சீக்கர் தொழிற்நுட்பத்துடன் எதிரியின் இலக்கை தாக்கி அழிக்க கூடியது.

இந்த ஆயுதம் 100 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் என DRDO தெரிவித்துள்ளது. அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் உள்ள சந்தன் எல்லையில் இந்திய விமானப்படையின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது.

இரண்டு சோதனைகளிலுமே உத்தேசிக்கப்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அளித்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் ஆண்டி ஏர்ஃபீல்டு ஆயுதத்தை DRDO மற்றும் RCI இணைந்து வடிவமைத்துள்ளது.

Also Read: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘துஷீல்’ போர்கப்பல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது

இந்த SAAW ஆயுதமானது 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானம் மூலம் இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஸ்பைஸ் 2000 SAAW குண்டுகளை வீசியது. இதன் தேவையை உணர்ந்த இந்திய இராணுவம் இந்த SAAW குண்டுகளை சோதனை செய்து வருகிறது.

Also Read: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..

ஆயுதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் DRDO தலைவர் சதீஷ் ரெட்டியும் DRDO குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் டார்பிடோக்கள்.. இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம்..

Leave a Reply

Your email address will not be published.