புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO.

DRDO புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணை DRDO மூலம் வடிவமைக்கப்பட்டு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை வான் இலக்குகளை தாக்கி அழிக்க கூடியது. இது 40 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க கூடியதாகும். மேலும் இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்க கூடியது என கூறப்பட்டுள்ளது.

தரையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை போர் விமானம், போர் கப்பல்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர் மற்றும் பீரங்கியில் இருந்தும் ஏவமுடியும்.

மேலும் இந்த ஏவுகணை இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்காக இந்த புதிய ஆகாஷ் NG ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளதாக DRDO கூறியுள்ளது. மேலும் இந்த ஏவுகணை 2.5 மேக் வேகத்தில் செல்லக்கூடியது.

சோதனையின் போது அதன் தாக்குதல் திறன், வேகம், ரேடார் அமைப்பு ஆகியவை சோதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்திய இராணுவம் பல ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இராணுவம் தொடர்பான அறிக்கையில் இந்திய இராணுவம் உலக அளவில் நான்காவது வலிமையான இராணுவமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *