எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கும் தொழிற்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..
இந்திய கடற்படை கப்பல்களை எதிரி ஏவுகணையிலிருந்து பாதுகாக்க DRDO ஒரு சாஃப் தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தொழிற்நுட்பமானது எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் எதிரிகளின் ஏவுகணையை திசை திருப்பி அழிக்கிறது. இதன் மூலம் நமது கடற்படை கப்பல்களை பாதுகாக்க முடியும்.
DRDO மூன்று வகையான சோதனைகளை மேற்கொண்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர சாஃப் ராக்கெட்டை உருவாக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இதன் மூலம் எதிரிகளின் ஏவுகணைகளை நம்மால் அழிக்க முடியும். மேலும் இதனை அதிக அளவில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
DRDO ஏற்கனவே பல்வேறு வகையான ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. அந்த வரிசையில் இந்த சாஃப் ராக்கெட்டை சோதனை செய்துள்ளது. மிகப்பெரிய கடற்படையை வைத்துள்ள சீனாவை எதிர்கொள்ள நமது கடற்படைக்கு இதுபோன்ற தொழிற்நுட்பம் தேவைப்படுகிறது.