எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் VL-SRSAM ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) திங்களன்று ஒடிசா கடற்கரையில் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் இரண்டு செங்குத்து ஏவுதல் குறுகிய தூர தரை வான் ஏவுகணையை (Vertical launch short range surface- to-air missile or VL-SRSAM) வெற்றிகரமான சோதனை செய்தது.

இந்திய கடற்படைக்காக டி.ஆர்.டி.ஓ.வால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது, VL-SRSAM என்பது கடல்-ஸ்கிம்மிங் இலக்குகள் உட்பட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை தாக்கி அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது என DRDO கூறியுள்ளது.

இந்த ஏவுகணைகள் முதல் ஏவலின் ஒரு பகுதியாக அதன் திறனை நிரூபிக்கும் வகையில் நடத்தப்பட்டன. இரு சோதனைகளிலும், ஏவுகணைகள் மற்றும் இலக்குகளை துல்லியமாக இடைமறித்தன. இந்த ஏவுகணை 40 கி.மீ வரை உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஏவுகனைகள் டி.ஆர்.டி.எல், ஆர்.சி.ஐ. ஹைதராபாத் மற்றும் புனே ஆர் அண்ட் டி இன்ஜினியர்ஸ் போன்ற பல்வேறு டி.ஆர்.டி.ஓ ஆய்வக மூத்த விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டன.

சோதனை துவக்கங்களின் போது, ​​விமானத் தரவைப் பயன்படுத்தி விமானப் பாதை மற்றும் வாகன செயல்திறன் அளவுருக்கள் கண்காணிக்கப்பட்டன, இது ரேடார், EOTS மற்றும் ITR, சண்டிப்பூர் மூலம் பயன்படுத்தப்படும் டெலிமெட்ரி அமைப்புகள் போன்ற பல்வேறு வரம்பு கருவிகளால் கைப்பற்றபட்டன.

தற்போதைய சோதனைகள் ஆயுத முறையின் செயல்திறனை நிரூபித்துள்ளன, மேலும் இந்திய கடற்படை கப்பல்களில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் இன்னும் சில சோதனைகள் நடத்தப்படும்.

இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டி.ஆர்.டி.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்தார். VL-SRSAM ஏவுகணை அமைப்பின் வெற்றிகரமான விமான சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள சிறிய தூரமான செங்குத்து ஏவுகணை (VL-SRSAM) வெற்றிகரமாக ஏவப்பட்ட DRDO க்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

பாதுகாப்பு நடவடிக்கையாக, பாலசோர் மாவட்ட நிர்வாகம், ஏவுதளத்திலிருந்து 2.5 கி.மீ சுற்றளவில் உள்ள ஐந்து குக்கிராமங்களில் வசிக்கும் 6,322 பேரை தற்காலிகமாக வெளியேற்றியது. அவர்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *