DRDO இந்திய இராணுவத்திற்காக மிக குறைந்த எடையிலான புல்லட் புரூஃப் ஜாக்கெட்டை தயாரித்துள்ளது..
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மிக குறைந்த எடையிலான புல்லட் புரூஃப் ஜாக்கெட்டை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் DRDO ஏர் இண்டிபெண்டன்ட் புரோபல்சன் அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த டீசல் புரோபல்சன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை விட குறைவாகவே சத்தத்தை எழுப்பும். மேலும் இந்த டீசல் நீர்மூழ்கி கப்பல்களால் நீண்ட நேரம் நீருக்கு அடியில் தாக்கு பிடிக்க முடியும்.
இதன் முந்தைய புல்லட் புரூஃப் ஜாக்கெட் 10.4 கிலோ எடை கொண்டது. ஆனால் புதிதாக தயாரிக்கப்பட்ட இந்த ஜாக்கெட் 9 கிலோ மட்டுமே எடை கொண்டது. இதன் மூலம் இராணுவ வீரர்கள் கையாள்வதற்கு எளிதாக இருக்கும். மேலும் உயிர் சேதத்தையும் தவிர்க்க முடியும்.
சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் BIS தர சோதனை செய்யப்பட்டது. இந்த இலகுரக புல்லட் புரூஃப் ஜாக்கெட்டை உருவாக்கியதற்காக DRDO அமைப்புக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு தட்வாளங்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. அதன் அடிப்படையில் தடை விதிக்கப்பட்ட பாதுகாப்பு தடவாளங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.