DRDO தகவல் திருடப்பட்ட வழக்கு.. மர்ம பெண்ணை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் ஒடிசா போலிஸ்..

இந்திய பாதுகாப்பு தகவலை திருடியதாக கூறப்பட்ட பெண்ணின் புகைப்படம் கிடைத்திருப்பதாக ஒடிசா போலிசார் தெரிவித்துள்ளனர். அந்த மர்ம பெண் DRDO ஊழியர்கள் 5 பேரிடம் பழகி இந்த ரகசியங்களை தெரிந்து கொண்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியதில், DRDO தயாரிக்கும் ஏவுகணைகள், ராக்கெட் மற்றும் பல ஆயுதங்கள் தொடர்பான ஆவணங்களை மர்ம பெண் ஒருவர் DRDO ஊழியர்கள் 5 பேரிடம் பழகி தகவலை பெற்றுள்ளார். 5 பேரில் இருவரிடம் அவர்களை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் வாட்ஸ்அப்பை தவிர மற்ற சமூகவலைதளங்கள் மூலம் பழகி வந்துள்ளார். பேஸ்புக்கில் அந்த பெண் 7 கணக்கு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பெண் இங்கிலாந்து சிம் கார்டை பயன்படுத்தி இவர்களிடம் பேசி வந்துள்ளார். 5 பேரிடமும் வீடியோ காலிலும் பேசி வந்துள்ளார்.

வீடியோ காலில் இருந்து அந்த பெண்ணின் புகைபடத்தை பெற்றுள்ளதாக ஒடிசா காவல்துறை குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் சஞ்சீவ் பாண்டா கூறினார். மேலும் அந்த மர்ம பெண் குற்றாவாளிகள் ஒரிவரின் செல்போனை ஹேக் செய்து எட்டு மாதங்களாக தகவலை திருடியுள்ளார். ஒடிசாவில் உள்ள சோதனை தளம் பற்றிய ரகசியங்களை அந்த பெண் பெற்றுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு துபாயில் இருந்து இரண்டு தவணைகளாக 38,000 ரூபாய் வந்துள்ளது. மேலும் ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு DRDO பற்றிய தகவலை பாகிஸ்தானிற்கு அனுப்பியுள்ளார். மேலும் அந்த பெண் ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள தனது வீட்டிற்கும் குற்றவாளிகளை அழைத்து உரையாடியுள்ளார்.

Also Read: ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தனது விமானப்படையில் இணைக்கும் இஸ்ரேல்..

இதுகுறித்து இந்திய விமானப்படையின் உளவு பிரிவு அதிகாரிகள், தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் ஒடிசா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அந்த பெண்ணின் புகைப்படம் கிடைத்துள்ள நிலையில் அவரை பிடிக்க இன்டர்போலிடம் உதவி கோரப்படும் என ஒடிசா போலிஸ் அதிகாரி பாண்டா தெரிவித்துள்ளார்.

Also Read: இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணனுடன் கைது செய்யப்பட்ட 2 மாலத்தீவு பெண்கள் நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை..

இந்த தகவல் திருட்டினால் DRDOவின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது. காவலில் இருக்கும் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். ஒடிசா போலிஸ் சார்பில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *