ஏரோ இஞ்சின்களுக்கான பிளேடு தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ள DRDO..

இந்தியாவின் DRDO ஒரு மிகப்பெரிய தொழிற்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஹெலிகாப்டரில் பயன்படுத்துவதற்கு ஒற்றை படிக பிளேடு (Single Crystal Blade) தொழிற்நுட்பத்தை DRDO உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இந்த தொழிற்நுட்பத்தை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளே உருவாக்கியுள்ளன அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த ஒற்றை படிக பிளேடை தயாரிக்கும் ஒப்பந்தம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

DRDOவின் ஆய்வகமான டிபென்ஸ் மெட்டலஜிகல் ஆய்வகம் நிக்கல் அடிப்படையிலான ஒற்றை படிக உயர் அழுத்த டர்போ பிளேடை (5 செட்) 300 எண்ணிக்கையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு செட் அதாவது 60 பிளேடை தயாரிக்கும் ஒப்பந்தம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்நுட்பத்தை உருவாக்க DRDO நீண்ட நாட்களாக பணியாற்றி வருகிறது. ஹெலிகாப்டர்கள் தீவிரமான நிலைகளில் செயல்பட சக்தி வாய்ந்த எஞ்சின்கள் தேவை. சிக்கலான வடிவம் மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கக்கூடிய ஒற்றை படிக பிளேடை நிக்கல் அடிப்படையிலான சூப்பர் உலோகக்கலவை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

ஏரோ இஞ்சின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஒற்றை படிக பிளேடு தொழிற்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹலிகாப்டருக்கு தேவையான பிளேடுகளை சொந்தமாகவே உற்பத்தி செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *