DRDO மற்றும் இந்திய விமானப்படை இணைந்து நடத்திய நீண்ட தூர வெடிகுண்டு சோதனை வெற்றி..

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விமானப்படை இணைந்து நீண்ட தூர வெடிகுண்டை (Long-Range Bomb) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளன. இது இந்திய ஆயுத படைகளுக்கு மேலும் வலிமையை அதிகரித்துள்ளது.

ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் DRDO மற்றும் இந்திய விமானப்படை இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கிய நீண்ட தூர வெடிகுண்டை இன்று சோதனை செய்தனர். இந்திய விமானப்படையின் விமானத்தில் இருந்து வெடிகுண்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக DRDO சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அதன் செயல்திறன் மற்றும் விமானம் ஆகியவை எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம், டெலிமெட்ரி மற்றும் ரேடார் உள்ளிட்ட சென்சார்களால் துல்லியமாக கண்காணிக்கப்பட்டது. சோதனையின் முடிவில் நீண்ட தூர வெடிகுண்டு இலக்கை துல்லியமாக தாக்கி அளித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நீண்ட தூர வெடிகுண்டு ஐதரபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான ரிசர்ச் சென்டர் இமாரத் மற்றும் மற்ற DRDO ஆய்வகங்கள் இணைந்து இந்த வெடிகுண்டை உருவாக்கி உள்ளன. மேலும் சில நாட்களுக்கு முன்பு தான் அக்னி 5 அணு ஆயுத ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

Also Read: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO..

தற்போது இந்த நீண்ட தூர வெடிகுண்டு வெற்றியின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக DRDO தெரிவித்துள்ளது. DRDO தலைவர் சதிஷ் ரெட்டி கூறுகையில், நீண்ட தூர வெடிகுண்டின் வெற்றிகரமான சோதனை, உள்நாட்டு வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்தார்.

Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் டார்பிடோக்கள்.. இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம்..

இந்த சோதனை வெற்றி அடைந்ததன் மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், DRDO, இந்திய விமானப்படை மற்றும் இணைந்து பணியாற்றிய அனைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்த நீண்டதூர வெடிகுண்டு வெற்றி அடைந்ததன் மூலம் இந்தியாவின் ஆயுத பலம் அதிகரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Also Read: அபியாஸ் அதிவேக வான்வழி விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

Leave a Reply

Your email address will not be published.