இஸ்லாமிய நாடுகளுக்கு பயணத்தடை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை..

தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாக்க சில முஸ்லிம் நாடுகளின் மீதான பயணத்தடையை மீண்டும் கொண்டு வருமாறு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த போது ஈரான், ஈராக், சோமாலியா, லிபியா, சூடான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்திருந்தார். இந்த நிலையில் இந்த தடையை தற்போதைய அதிபர் ஜோ பிடன் நீக்கிவிட்டார்.

இதனால் நாட்டை பாதுகாக்க தான் அமல்படுத்திய அகதிகள் சட்டத்துடன் பயண தடையும் விதிக்க வேண்டும் என ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். பயங்கரவாதிகள் உலகெங்கிலும் ஆன்லைனில் ஆள் சேர்த்து வருகின்றனர். பயங்கரவாதத்தை நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது.

நாங்கள் செயல்படுத்திய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஐரோப்பா செய்த பல குடியேற்ற தவறுகளை ஜோ பிடன் செய்யக்கூடாது என கூறினார். தான் ஆட்சியில் இருந்த போது எந்த பெரிய தீவிரவாத தாக்குதலும் நடைபெறவில்லை என கூறினார்.

மேலும் அகதிகளை தடுக்க மெக்சிகோ எல்லையில் எழுப்பிய சுவரை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். சவுதி அரேபியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வந்த ட்ரம்ப் அது தமது ஆட்சியில் மிகப்பெரிய சாதனை என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *