சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்தி.. வருமானம் இழந்த ரஷ்யா..

இந்தியா பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஆரமித்ததால் ரஷ்யாவுக்கு 23% வரை பாதுகாப்பு ஏற்றுமதியில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. 2011 – 2015 காலகட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தடவாளங்கள் இறக்குமதி 14 சதவீதமாக இருந்தது. பின்னர் இந்த இறக்குமதி 33 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 2016 – 2020 காலகட்டத்தில் 9.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

இதற்கு காரணம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா உள்நாட்டிலேயே பாதுகாப்பு தடவாளங்களை தயாரிப்பதே காரணம் என கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்துதான் அதிகமாக இறக்குமதி செய்கிறது.

ரஷ்யா அதன் மொத்த ஏற்றுமதியில் 26 சதவீத பாதுகாப்பு தடவாளங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இது இப்போது 20 சதவீதம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தியா அதிகமாக ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலிடம் இருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்வதையும் இந்தியா குறைத்துள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேலுடன் நெருங்கிய நட்பில் உள்ள இந்தியா அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இறக்குமதியை குறைக்க மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. இதன்மூலம் அந்த நாடுகளுடன் கூட்டு சேர்ந்து உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளன.

2025 க்குள் இந்தியா 5 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய உள்நாட்டிலேயே பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் ஏற்றுமதியாளராக ஆசிய நாடுகளே உள்ளன. அதிக அளவில் மியான்மர், இலங்கை, மொரிசியஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பு தடவாளங்களை ஏற்றுமதி செய்கிறது.

பல்வேறு ஐரோப்பிய ஆப்ரிக்க நாடுகளும் இந்தியாவின் பிரமோஸ் மற்றும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *