எல்லை பாதுகாப்பு படையை 50 கிமீ அப்பால் அனுமதிக்க வேண்டாம்: மம்தா பானர்ஜி

சர்வதேச எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் எல்லை பாதுகாப்பு படையை (BSF) அனுமதிக்க வேண்டாம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூச் பெஹார் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மத்திய அரசு பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திற்குள் தேடுதல், கைப்பற்றுதல் மற்றும் கைது செய்ய எல்லை பாதுகாப்பு படைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் BSF சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உடனான சர்வதேச எல்லைகளில் 15 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை BSF அதிகார வரம்பை நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் மேற்குவங்கம் கடந்த ஆண்டு நவம்பரில் தீர்மானங்கள் நிறைவேற்றின. அக்டோபர் 11, 2021 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இருமாநில அரசுகளும் கேட்டுக்கொண்டன.

Also Read: புல்வாமாவில் நடந்த என்கவுண்டரில் 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுகொலை..

இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் கூறுகையில், BSF கிராமங்களுக்குள் புகுந்து மக்களை துன்புறுத்துகிறது. சர்வதேச எல்லையின் மறுபுறத்தில் அவர்களை வீசுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தில் சர்வதேச எல்லையை தாண்டி 50 கிலோமீட்டர் பகுதிக்குள் BSF நுழைய அனுமதிக்காதீர்கள் என மாநில காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடனான மெய்நிகர் கூட்டத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கூறுகையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாகவும், ஆனால் ஒரு சில ஊடகங்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புவதாகவும் கூறினார். மேலும் தற்கொலை மரணம் ஒரு கற்பழிப்பு வழக்காக எதிர்கட்சிகளால் சித்தரிக்கப்பட்டது.

Also Read: கேரள மாடலை கைவிட்டு குஜராத் மாடலை பின்பற்றும் கேரளா.. அதிகாரிகளை குஜராதிற்கு அனுப்புகிறது..

பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் மேற்குவங்கத்தை அவதூறு செய்ய முயற்சிகின்றன என கூறினார். மேலும் மேற்குவங்கத்தை ஹத்ராஸ் ஆகவோ அல்லது உன்னாவோ ஆகவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதலமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.