பாகிஸ்தானில் 2,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் கண்டுபிடிப்பு..

பாகிஸ்தானில் 2,300 ஆண்டுகள் பழைமையான புத்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இஸ்லாமிய தேசமாக இருக்கும் பாகிஸ்தானில், பாகிஸ்தான் மற்றும் இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வட மேற்கு பாகிஸ்தானில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தின் பரிஹோட் தெஹ்சில் பசிரா என்ற இடத்தில் இந்த புத்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கோவில் பாகிஸ்தானின் மிக பழமையான புத்த கோவில் என கூறப்படுகிறது. மேலும் சில விலையுயர்ந்த கலைப்பொருட்களையும் கண்டுபிடித்துள்ளகாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கோவில் தக்ஸிலாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிலை விட பழமையான கோவில் என கூறப்படுகிறது. மேலும் அகழ்வாராய்ச்சியின் போது புத்த காலத்தை சேர்ந்த பழங்கால கலைப்பொருட்கள், நாணயங்கள், மோதிரங்கள் மற்றும் பானைகள் உட்பட 2,700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கிரேக்க மன்னர் மெனாண்டர் காலத்து கரோஸ்தி மொழியின் எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியிள்ளனர்.

இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர் லூகா மரியா ஆலிவரி கூறுகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த கோவில் தக்ஸிலாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிலை விட பழமையானது என தெரிவித்துள்ளார். கைபர் பக்துன்க்வாவில் தொடர்சியாக கொள்ளையர்களின் குழிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்த ஒரு புத்த நினைவு சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Also Read: பாகிஸ்தானில் இலங்கை நபரை கொன்று உடலை எரித்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு..

இதேபோல் கடந்த மாதம் பாரிகோட்டில் கல்லறைகள், மண்பாண்ட துண்டுகள் மற்றும் பிற தொல்பொருட்களை கண்டுபிடித்ததாகவும், அவை இந்தோ-கிரேக்க மற்றும் சாகா-பார்த்தியன் காலகட்டத்திற்கு முந்தையவை என கூறியுள்ளார். தற்போது பாசிராவில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் பல தொல்பொருட்கள் கண்டறியப்படும் என மரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை.. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு..

அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறையின் இயக்குனர் அப்துஸ் சமத் கூறுகையில், பாசிரா நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எச்சங்கள் தக்சிலா எச்சங்களை விட பழமையானது. அகழ்வராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் 14 தொல்பொருள் இடங்களை கைபர் பக்துன்க்வா அரசாங்கம் வாங்கியுள்ளதாகவும், இத்தாலிய மற்றும் கைபர் பக்துன்க்வா தொல்லியல் துறைகளின் Phd மாணவர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Also Read: குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

Leave a Reply

Your email address will not be published.