சீனாவில் நிலக்கரி தட்டுப்பாட்டை தொடர்ந்து தற்போது டீசல் தட்டுப்பாடு..

சீனாவில் தற்போது டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில வாரங்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது.

சீனாவில் காலநிலை மாற்றத்தால் அளவுக்கு அதிகமான மழை, இயற்கை சீற்றம், நிலச்சரி ஆகியவற்றால் சுரங்கங்களில் நிலக்கரி எடுக்க முடியாக நிலை ஏற்பட்டது. இதனால் சீனாவில் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

நிலக்கரி இல்லாததால் மின்சாரமும் தடை பட்டது. பல லட்சக்கணக்கான வீடுகள், அலுவலகங்கள், கார்ப்ரேட் நிறுவனங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டன. மின்சார பிரச்சனையை சமாளிக்க அனைவரும் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை பயன்படுத்த ஆதம்பித்தனர்.

இதனால் டீசலில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்ல, தற்போது சீனா முழுவதும் டீசல் பற்றாக்குறை நிலவி வருகிறது. சீனாவின் வணிக செய்தி நிறுவன அறிக்கையில், சீனாவில் ஒரு ட்ரக்கிற்கு 100 லிட்டர் டீசல் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதனையும் குறைத்து தற்போது ஒரு ட்ரக்கிற்கு 25 லிட்டர் டீசல் மட்டுமே நிரப்பப்படுவதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். சீனாவின் சமூகவலைத்தளமான வெய்போவில் டீசல் நிறப்ப நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?

மேலும் ட்ரக்கின் டேங்கை நிரப்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ட்ரக்கில் டீசல் நிரப்ப டீசல் விலையுடன் கூடுதலாக 300 யுவான் வசூலிக்கப்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் தற்போது 17 மகாணங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read: இங்கிலாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.. இராணுவத்தை பயன்படுத்த முடிவு..

ட்ரக்குகள் சரக்குகளை எடுத்து செல்லாததால் சீனா முழுவதும் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் சீனாவின் இந்த நிலையால் உலக அளவிலும் பாதிப்பு ஏற்படும் என வல்லுநர்கள் கூறி உள்ளனர். மின் பற்றாக்குறையால் ஆப்பிள், டெஸ்லா போன்ற நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை குறைத்துள்ளனர். மின்தடை நிலைமையை மேலும் மோசமாக்கும் என கூறப்படுகிறது.

Also Read: பின்னடைவில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம்.. சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து வரும் ஆப்ரிக்க நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.