JCB சவாரியால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தாரா போரிஸ் ஜான்சன்..?

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதனை இந்தியாவில் உள்ள சில இஸ்லாமியர்கள், காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் மோடி எதிர்ப்பாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கு இந்தியாவில் JCB சவாரி செய்ததே காரணம் என கூறி வருகின்றனர்.

இந்தியாவில் சமீப காலமாக சட்டவிரோதமாக வன்முறையில் ஈடுபடும் நபர்களின் சட்டவிரோத கட்டிடங்கள் புல்டோசரால் இடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சில இஸ்லாமியர்கள், காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் மோடி எதிர்ப்பாளர்கள் புல்டோசர் இடிப்பை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வதோதராவில் பிரிட்டிஷ் நிறுவனத்தின் தொழிற்சாலையை திறந்து வைத்தபோது அவர் ஒரு JCB யில் சவாரி செய்தார். இதனை காங்கிரஸ் ஆதரவாளர்களும், மோடி மற்றும் யோகி எதிர்ப்பாளர்களும் சட்டவிரோத கட்டிடி இடிப்புக்கு ஆதரவு தெரிவிப்பது போல் விமர்சித்தனர்.

உண்மையில் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்ததற்கும், JCB க்கும் எந்த தொடர்வும் இல்லை. போரிஸ் ஜான்சன், கட்சியின் துணை தலைமை கொறடாவாக கிறிஸ் பிஞ்சரை நியமித்ததற்காக ராஜினாமா செய்துள்ளார். லண்டன் கிளப்பில் குடிபோதையில் இரண்டு ஆண் ஊழியர்களை துணை தலைமை கொறடா தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் பதவி விலக நேரிட்டது.

பின்னர் போரிஸ் ஜான்சன் கிறிஸ் பிஞ்சரை துணை தலைமை கொறடாவாக நியமித்தார். முன்னதாக பிப்ரவரியில் கிறிஸ் பிஞ்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அறிந்திருந்தும் போரிஸ் ஜான்சன் கிறிஸ் பிஞ்சரை நியமித்தார். கிறிஸ் பிஞ்சரை நியமிக்கும் போது அப்பட்டமாக பொய் சொன்ன தலைவரை இனி ஆதரிக்க முடியாது என அக்கட்சி எம்.பிக்கள் தெரிவித்தனர்.

இதுதவிர கோவிட் லாக்டவுன் போதும் போரிஸ் ஜான்சன் தனது கட்சி எம்.பிக்ளால் அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எம்.பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் வேறு வழியின்றி போரிஸ் ஜான்சனும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை இங்கு உள்ள எதிர்ப்பாளர்கள் JCB உடன் இந்த பிரச்சனையை இணைத்து JCB ஆல் தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.