தரமான உள்கட்டமைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை.. 100 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பிரதமர் மோடி 100 லட்சம் கோடி மதிப்பிலான கதிசக்தி திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் சாலை, இரயில்வே, துறைமுகம் என்ன் அனைத்தும் மேம்படுத்தப்படும்.

பிரதமர் மோடி நாட்டின் 75வது சுதந்திர தினத்தன்று 100 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் அதற்கான துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் பேசிய மோடி நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

தரமான உள்கட்டமைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை என கூறினார். இந்த திட்டத்தின் நோக்கம் அனைத்து துறைகளையும் ஒன்றிணைப்பது ஆகும். இதன் மூலம் உள்கட்டமைப்புக்கான செலவு மற்றும் நேரம் மிச்சமாகும். மேலும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தடவாள செலவுகளை குறைக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். அனைத்து துறைகளும் ஒரு துறையின் கீழ் வரும்போது உட்கட்டமைப்பு வேகம் அதிகரிக்கும். உதாரணமாக சாலைகள் போடும் போது எரிவாயு குழாய் அமைக்க மற்றும் கேபிள் பதிக்க சாலைகள் மீண்டும் மீண்டும் தோண்டப்படுகின்றன. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

இதனை தடுக்க அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்தால் ஒரு திட்டம் வகுத்து அதற்கு ஏற்றார் போல் அத்திட்டத்தை மாற்ற முடியும். சாலை, இரயில்வே, துறைமுகம், விமான போக்குவரத்து, விவசாயம் ஆகியவற்றிற்காக இந்த கதிசக்தி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியை குறைத்து இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான நோக்கமாக இந்த திட்டம் அமையும். 1987 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான எரிவாயு குழாய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் 2014 ஆம் ஆண்டு வரை 15,000 கிமீ தூரம் வரைதான் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தனது ஏழு ஆண்டு ஆட்சியில் 16,000 கிமீ வரை பதிக்கப்பட்டுள்ளதாக மோடி கூறினார்.

Also Read: ஜம்மு காஷ்மீர் அரசியலில் பரபரப்பு.. தேசிய மாநாட்டு கட்சியில் இருந்து விலகிய ராணா.. பாஜகவில் இணைகிறார்..?

அதேபோல் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 1,900 கிலோ மிட்டருக்கு மட்டுமே இரட்டை ரயில் பாதை செயல்படுத்தப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் 9,000 கிலோமீட்டராக அதிகரிக்க பட்டுள்ளதாக மோடி கூறினார். மன்மோகன் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 3,000 கிலோ மீட்டர் ரயில் பாதை மட்டுமே மின்மயமாக்க பட்டதாகவும், தன்னுடைய 7 ஆண்டு ஆட்சி காலத்தில் 24,000 கிலோமீட்டருக்கு மின்மயமாக்க பட்டுள்ளதாக மோடி கூறினார்.

Also Read: “ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டம்” 140 நாடுகளை இணைக்கும் பிரதமர் மோடியின் சூரியஒளி திட்டம்..

துறைமுகங்களில் கப்பல் திரும்பும் நேரம் 41 மணி நேரத்தில் இருந்து 27 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் 60 கிராம பஞ்சாயத்துகளில் மட்டுமே இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தன்னுடைய 7 ஆண்டு கால ஆட்சியில் 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

தன்னுடைய ஆட்சியில் மெட்ரோ 250 கிலோ மீட்டரில் இருந்து 700 கிலோ மீட்டராக விரிவடைந்து உள்ளது, இதனை மேலும் 1000 கிலோ மீட்டருக்கு விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மோடி தெரிவித்தார். இந்த கதிசக்தி திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளும் இணைக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் வேகமெடுக்கும் என பிரதமர் மோடி இந்த விழாவில் கூறினார்.

Also Read: இந்தியாவில் சிப் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தைவானுடன் பேச்சுவார்த்தை.. எச்சரிக்கும் சீனா..

Leave a Reply

Your email address will not be published.