இந்தியா வரும் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் விமானம்.. சீனாவுக்கு எதிராக களமிறக்க திட்டம்..

எதிரி நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்து தாக்கி அழிக்கும் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் 11வது P-8I போஸிடான் விமானம் விரைவில் இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்யப்பட உள்ளது.

உலகிலேயே மிகவும் துல்லியமாக நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் விமானமாக P-8I Poseidon பார்க்கப்படுகிறது. இதனை இந்தியா 2009 ஆம் ஆண்டு 2.177 பில்லியன் மதிப்புள்ள 8 P-8I விமானங்களை ஆர்டர் செய்தது. அமெரிக்காவிற்கு பிறகு இந்த விமானத்தை பயன்படுத்தும் முதல் சர்வதேச நாடாகவும் இந்தியா மாறியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மேலும் நான்கு P-8I போஸிடான் விமானம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிரி நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்து தாக்கி அழிக்க முடியும்.

இந்த நிலையில் இன்னும் அதிகமான P-8I விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்லது அதற்கு பதிலாக MQ-9B C கார்டியன் ஆளில்லா வான்வழி வாகனங்களை(UAVs) வாங்கவும் இந்திய விமானப்படை ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த விமானத்தில் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய ரேடியான் மல்டி மோட் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பலில் இருந்து உருவாகும் காந்தப்புலத்தின் மூலம் இந்த விமானம் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிகிறது. நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்த பின் அதனை அழிக்க விமானத்தில் ஆன்போர்டு ஹார்பூன் ஏவுகணைகள் மற்றும் மார்க் 54 டார்பிடோக்கள் உள்ளன.

தற்போதைக்கு இந்த விமானத்தை இந்தியா தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பயன்படுத்துகின்றன. சமீபத்தில் நடந்த மலபார் போர் பயிற்சியிலும் இந்த P-8I விமானம் பயன்படுத்தப்பட்டது. மேலும் லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலின் போதும் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது.

Also Read: இந்தியா அமெரிக்கா இடையே போர் பயிற்சி.. போர் பயிற்சியில் மெட்ராஸ் படை வீரர்கள்.. இலங்கையுடன் நிறைவு..

இந்த விமானத்தை நீர்மூழ்கி கப்பலை அழிப்பது மற்றும் உளவு பார்க்க மட்டுமில்லாமல் பேரிடர் மீட்பு பணிகளுக்கும் பயன்படுத்த முடியும். இந்த நிலையில் 11 வது P-8I விமானம் இந்தியா வர உள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும்.

ஒருவேளை சீனாவுடன் போர் ஏற்பட்டால் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கவும் அவற்றை அழிக்கவும் இந்த விமானங்களை பயன்படுத்த முடியும். முக்கியமாக சீன நீர்மூழ்கி கப்பல்கள் வரும் வழியான மலாக்கா, லோம்போக், சுந்தா போன்ற பகுதிகளில் கண்காணிப்பை தீவிர படுத்த முடியும்.

Also Read: ராய்பூர் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 6 CRPF வீரர்கள் காயம்..

போயிங் நிறுவனம் P-8I விமானத்தின் பயிற்சி மற்றும் தரவு கையாளும் மையத்தை தமிழகத்தின் அரக்கோணத்தில் கட்டமைத்து வருகிறது. மேலும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கான ஃபியூஸ்லேஜ்களை தயாரிப்பதற்காக டாடா குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

Also Read: ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.. பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு.

Leave a Reply

Your email address will not be published.