ஜனநாயக உச்சி மாநாடு.. இந்தியா, தைவானுக்கு அழைப்பு.. இது சர்வாதிகாரம் என சீனா விமர்சனம்..

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் “ஜனநாயக உச்சி மாநாட்டில்” பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் இந்தியா மற்றும் தைவான் நாடுகள் உள்ளன. ஆனால் சீனா, ரஷ்யா இல்லை. அமெரிக்கா அதிகாரபூர்வமாக இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில் அமெரிக்க செய்தி சேனல்களில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜனநாயக உச்சி மாநாடு டிசம்பர் 9 முதல் 10 ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் ஜனநாயக பிரச்சனைகளில் கவனம் செலுத்துதல், சர்வாதிகாரத்திற்கு எதிரான பாதுகாப்பு, ஊழலுக்கு எதிராக போராடுதல் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதையை ஊக்குவித்தல் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட உள்ளன.

இந்த ஜனநாயக உச்சி மாநாட்டிற்கு சீனா, ரஷ்யா, வடகொரியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், துருக்கி சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இல்லை. ஏனென்றால் இவையெல்லாம் ஜனநாயக நாடுகள் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை கிடையாது.

சீனாவில் தேர்தல் கிடையாது. அங்கு கம்யூனிஸ்ட் கட்சியில் தேர்ந்தெடுப்பவர்கள் மட்டுமே அதிபர் ஆவார். ரஷ்யாவிலும் தேர்தல் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி கிடையாது. அங்கு எதிர்கட்சித்தலைவர் சிறையில் உள்ளார். வடகொரியாவிலும் தேர்தல் இல்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் தாலிபான் மற்றும் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது.

ஈரானில் தேர்தல் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி அனைவரும் போட்டி போட முடியாது. அதேபோல் இந்தியா, தைவான், பாகிஸ்தான், வியட்நாம், ஜப்பான், நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவு போன்ற 100க்கும் மேற்பட்ட ஜனநாயக நாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: COP26 பருவநிலை மாற்றம்.. கார்பன் உமிழ்வு ‘நிகர பூஜ்ஜியம்’ என்ற இலக்கு எட்டப்படும் என பிரதமர் உறுதி..

இந்த உச்சி மாநாட்டிற்கு முன்பு டிசம்பர் 6 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற உள்ளது. சீனாவிற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே டெனிசோவ் கூறுகையில், அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறது. அனைத்து நாடுகளையும் மாநாட்டிற்கு அழைத்திருக்க வேண்டும்.

Also Read: அமெரிக்க ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்கும் தாலிபான்.. இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு..

ஆனால் அமெரிக்கா உயர்ந்த நாடு தாழ்ந்த நாடு என பிரித்து அவர்களின் நட்பு நாடுகளை மட்டும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது என ஆண்ட்ரே கூறினார். சீன தூதர் ஹூவா சுன்யிங் குறிப்பிடுகையில், ஜனநாயகம் என்ற பெயரில் கும்பலாக செயல்படுவது, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது, பிற நாடுகளின் வளச்சியையும் மக்களின் உரிமையையும் நசுக்குவது தான் ஜனநாயகம். இது மேலாதிக்கம் மற்றும் சர்வாதிகாரம் என சீன தூதர் குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: சீனாவில் நிலக்கரி தட்டுப்பாட்டை தொடர்ந்து தற்போது டீசல் தட்டுப்பாடு..

Leave a Reply

Your email address will not be published.