சிறுபான்மையினருக்கு கல்வி கட்டணத்தை திருப்பி செலுத்த பள்ளிகளுக்கு டெல்லி அரசு உத்தரவு..?

டெல்லியில் சிறுபான்மை மாணவர்களின் கல்வி கட்டணத்தை திருப்பி தருமாறு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஆம் ஆத்மி அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கு மட்டும் ஏன் கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என மக்கள் சமூகவலைதலங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சிறுபான்மை மாணவர்களின் கல்வி கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான திட்டத்தின் கீழ் ஆன்லைன் சரிபார்ப்பு முறையை விரைவு படுத்துமாறு டெல்லியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திருப்பி செலுத்துவதற்கான மாநில நிதியுதவி திட்டத்திற்கான விண்ணப்பங்களின் ஆன்லைன் சரிபார்ப்புகளையும் முடிக்குமாறு அனைத்து மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களை (DDE) டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அனைத்து DDE (மண்டலங்களும்) திட்டத்தின் வழிகாட்டுதல் படி ஆன்லைன் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான சான்றிதல்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் இருந்து சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களின் கையொப்பத்தின் கீழ் அவர்கள் விண்ணப்பங்களை மண்டல அளவில் சரிபார்ப்பதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தானியர்கள் நமது எதிரி அல்ல.. புனேவில் நடந்த ஈத் மிலன் நிகழ்ச்சியில் சரத் பவார் பேச்சு..

மேலும் இந்த சான்றிதழ்களை [email protected] என்ற முகவரியில் ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். மேலும் திட்டமிடல் கிளை, கல்வி இயக்குனரகம் அறை எண் 112, 15 மாடி, பழைய பத்ராச்சார் வித்யாலயா கட்டிடம், திமார்பூர், டெல்லி 110054 என்ற முகவரியில் 13 மே 2022 தேதிக்குள் சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read: PFI மற்றும் SDPI இரண்டும் பயங்கரவாத அமைப்புகள்: கேரள உயர்நீதிமன்றம்

கல்வி கட்டணத்தை திரும்ப பெரும் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அனைத்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினர், SC, ST மற்றும் OBC மாணவர்களின் கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த இந்த திட்டம் வழிவகை செய்கிறது. மலிவு விலையில் கல்வி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இருப்பினும் இந்த திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துவருகின்றனர்.

Also Read: உ.பியில் புல்டோசர் நடவடிக்கைக்கு பயந்து சொந்த வீட்டையே இடித்து தள்ளிய ஆலம் சித்திக்.

Leave a Reply

Your email address will not be published.