வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் 2024 வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் 2024ம் ஆண்டு வரையில் போராட்டம் நடத்த தயார் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு வேளாண் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் விவசாயி்கள் சங்கத்துடன் 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இருப்பினும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உச்சநீதிமன்றம் 4 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர் குழுவில் உள்ளவர்கள் வேளாண் சட்டத்தை ஆதரிப்பவர்களாக உள்ளதால், அவர்களால் தீர்வு காண முடியாது என கூறினர்.

பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறியதாவது: வேளாண் மசோதாக்களை திரும்பபெறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு பிடிவாதமாக இருந்தால் 2024ம் ஆண்டு மே மாதம் வரையில் போராட தயாராக உள்ளோம் என கூறினார்.

நாட்டில் எதிர்கட்சிகள் பலவீனமாக இருப்பதால், விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்ட தயாராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *