UAPA சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கை விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு..?

ஜம்மு காஷ்மீரின் விடுதலை முன்னணி தலைவர் முகமது யாசின் மாலிக் உட்பட 15 பேர் மீது 2017 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில் சட்டவரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் டெல்லி நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. UAPA சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இது ஒரு திட்டமிட்ட சதி மற்றும் அடால்ஃப் ஹிட்லர் மற்றும் நாஜி கட்சியின் அசல் துணை ராணுவ பிரிவு போல் இருந்ததாக கூறியுள்ளது. சிறப்பி நீதிபதி பர்வீன் சிங்கின் கூற்றுப்படி, ISI போன்ற எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் அமர்ந்திருப்பவர்களின் வழிகாட்டுதலின்படி திட்டத்தை உருவாக்குகிறார்கள்.

மேலும் ஜம்மு காஷ்மீர் பிரிவினையை மையமாக வைத்து வன்முறை, கலவரம் மற்றும் அழிவு ஆகியவை குறிக்கோளாக உள்ளன. பெரிய அளவிலான போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பரவலான வன்முறை மற்றும் அழிவில் உச்சக்கட்டத்தை எட்டிய குற்றச்சதி உள்ளது என்பது உறுதியாகியுள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இலக்கை அடைய வன்முறை செயல்களை செய்ய மற்றொரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. பயங்கரவாதம் தொடர்பான செயல்கள் உள்ளதாக கூறிய நீதிமன்றம் யாசின் மாலிக் உள்ளிட்டோர் மீது UAPA சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியுள்ளது.

காந்திய வழியை பின்பற்றும் அமைதியான போராட்டங்களாக இருக்க வேண்டும் என கூறிய நீதிமன்றம், போராட்டங்கள் வன்முறையானது மட்டுமல்ல, அவை வன்முறையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Also Read: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 10 வங்கதேசத்தினர் கைது.. பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா என விசாரணை..

குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாசின் மாலிக் மற்றும் அப்துல் ரஷீத் ஷேக், ஷபீர் அகமது ஷா, நவ்ரல், ஹபீஸ் முஹம்மது சயீத், எம்டி யூசுப் ஷா, அஃப்தாப் அஹ்மத் ஷா, நயீம் கான், அல்தாஃப் அஹ்மத் ஷா, ராஜா மெஹ்ராஜூதின் கல்வால், பஷீர் அகமது பட் மற்றும் ஜஹூர் அகமது ஷா வதாலி ஆகியோர் ஆவர்.

யாசின் மாலிக் காஷ்மீர் இந்துக்களின் இனப்படுகொலையில் தீவிரமாக பங்கேற்றவர் மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத அரசியல்வாதியாவார். காஷ்மீரில் தீவிரவாதத்தை ஆதரித்ததாக யாசின் மாலிக் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

Also Read: ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்தியாவிற்குள் கடத்தியதாக 6 பேரை கைது செய்த NIA..

மேலும் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தது மற்றும் முன்னாள் முதலமைச்சரும் அப்போதைய உள்துறை அமைச்சருமான முப்தி சயீத்தின் மகள் ருபையா சயீத்தை கடத்திய குற்றச்சாட்டும் யாசின் மாலிக் மீது உள்ளது. 1990 ஆம் ஆண்டு 4 விமானப்படை அதிகாரிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டும் யாசின் மாலிக் மீது உள்ளது. இந்த நிலையில் தான் டெல்லி நீதிமன்றம் UAPA சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.