CAA வன்முறையின் போது கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம்க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு..
டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடியுரிமைக்கு சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் என்பவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் CAA சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 106 பேர் கைது செய்யப்பட்டனர். கலவரத்தின் போது தலைமை காவலர் ரத்தன் லால் கொலை செய்யப்பட்டார்.
தலைமை காவலரை கொலை செய்ததாக முகமது இப்ராஹிம் என்பவரை டெல்லி போலிஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்தது. இதனிடையே ஜாமீன் கேட்டு முகமது இப்ராஹிம் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டெல்லியில் வன்முறை திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. முன்கூட்டியே சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்துள்ளனர். முகமது இப்ராஹிம் கையில் வாள் உடன் வருவது கேமராவில் பதிவாகியுள்ளது. ஒன்றரை கிலோ மீட்டர் அவர் கூர்மையான ஆயுதத்துடனே வந்துள்ளார்.
மேலும் கலவரத்தில் வாள், துப்பாக்கி, இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடனே இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் கூறினார்.
பல சிசிடிவி காட்சிகளில் குற்றவாளி ஆயுதத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது எனவும் நீதிபதி கூறினார். டெல்லியில் வன்முறை நிகழ்ந்த போதுதான் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டார். அவர் டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்படும் நேரத்தில் தான் டெல்லியில் வன்முறை நிகழ்த்தப்பட்டது.
Also Read: குஜராத் அருகே பிடிபட்ட 3,000 கிலோ போதைப்பொருள்..? தாலிபான்களுக்கு தொடர்பு..