INS விசாகப்பட்டினம் நாசகார போர்கப்பலை இன்று நாட்டுக்கு அற்பணிக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்..

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஸ்டெல்த் வழிகாட்டு ஏவுகணை அழிப்பு நாசக்கார கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பலை இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

மும்பையின் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற உள்ள விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் உயர் கடற்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். 35,000 கோடி மதிப்பில் 15பி திட்டத்தின் கீழ் நான்கு அதிநவீன போர்கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் முதல் போர்கப்பலான INS விசாகப்பட்டினம் அனைத்து சோதனைகளையும் முடித்து தற்போது கடற்படையில் இணைக்கப்படுகிறது.

இந்த போர் கப்பலில் அதிநவீன ஏவுகணைகள், நடுத்தர மற்றும் குறுகிய தூர துப்பாக்கிகள் மற்றும் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகியவை உள்ளன. மேலும் இந்த போர் கப்பலில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நிறுத்தும் திறனை பெற்றுள்ளது.

அதிநவீன போர் மேலாண்மை திறன்கள், அதிநவீன டிஜிட்டல் நெட்வொர்க் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதள மேலாண்மை அமைப்புடன் மிக உயர்ந்த அளவிலான ஆட்டோமேஷன் தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது. அடுத்த போர்கப்பல் 2023 ஆம் ஆண்டும் மற்ற இரண்டு போர் கப்பல்களும் 2025 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read: சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்து இருக்கிறது: அமெரிக்கா அறிக்கை

INS விசாகப்பட்டினம் போர்கப்பல் மசாகன் டெக் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 7,400 டன் எடை, 163 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலமும் கொண்டது. மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. 50 அதிகாரிகள் மற்றும் 250 மாலுமிகள் இந்த போர் கப்பலில் உள்ளனர்.

Also Read: F-16V போர் விமானத்தை தனது விமானப்படையில் இணைத்த தைவான்.. உச்சகட்ட கோபத்தில் சீனா..

விமான எதிர்ப்பு ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், தரை தாக்குதல் ஏவுகணைகள், நீர்மூழ்கிகப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளன. ஒரே நேரத்தில் 32 இலக்குகளை தாக்க கூடியது. அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயன வகை போர்களின் கீழ் போரிடுவதற்கும் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read: கடற்படை வலிமையை அதிகரித்து வரும் சீனா.. மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு அனுமதி அளிக்குமா பாதுகாப்பு அமைச்சகம்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *