ஜம்மு விமான நிலையத்தை மூட வேண்டாம்.. இந்திய விமானப்படைக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுரை..

ஜம்மு விமான நிலையத்தை 15 நாட்களுக்கு மூடுவதை தவிர்க்க இந்திய விமானப்படைக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார். ஏ.ஏ.ஐ.யுடன் ஒரு தீர்வு காணுமாறு IAFஐ கேட்டுக்கொண்ட அவர், விமான நிலைய மூடல் திட்டம் விரும்பத்தக்கதல்ல என்று கூறினார்.

இந்திய விமான நிலைய ஆணையத்துடன் (ஏஏஐ) இணைந்து பணியாற்றவும், அடுத்த மாதம் 15 நாட்களுக்கு பழுது பார்ப்பதற்காக ஜம்மு விமான நிலையத்தை மூடுவதை தவிர்க்க ஒரு வழியை கண்டறியுமாறும் இந்திய விமானப்படைக்கு பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் வியாழக்கிழமை ஆலோசனை கூறினார்.

டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திய விமானப்படை, AAI மற்றும் MES சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலாளரும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஜம்மு விமான நிலையத்தை மார்ச் 6 முதல் மார்ச் 20 வரை 15 நாட்களுக்கு மூடவேண்டும் என்றும், ஓடுபாதையை பழுது பார்க்கவும் இதர பணிகளை மேற்கொள்ளவும் இந்திய விமானப்படை சமீபத்தில் AAI க்கு கடிதம் எழுதியது.

“ஜம்மு விமான நிலையத்தை தொடர்ந்து 15 நாட்களுக்கு பழுது பார்ப்பதற்காக மூடுவது விரும்பத்தக்கதல்ல” என்று கூறி AAI உடன் ஒரு தீர்வை ஏற்படுத்துமாறு கூட்டத்திற்கு தலைமை வகித்த பாதுகாப்பு செயலாளர், இந்திய விமானப்படையிடம் கேட்டுக் கொண்டார்.

அவ்வாறு செய்வது நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும், எனவே இந்திய விமானப்படை AAI உடன் இணைந்து செயல்பட ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் கூறினர்.

தற்போது, மார்ச் 6ம் தேதி முதல், 15 நாட்களுக்கு, விமான நிலையம் மூடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் இந்த விவகாரத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ஜம்மு விமான நிலையத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு டஜன் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

புதன்கிழமை ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் சிவில் விமானப் போக்குவரத்துச் செயலர் பிரதீப் சிங் கரோலாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். சுப்ரமணியம் தனது கடிதத்தில், 15 நாட்கள் விமான நிலையத்தை முழுமையாக மூடுவது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மிகப்பெரிய நிர்வாக சிக்கல்களை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

இந்திய விமானப்படையின் கடிதத்தைத் தொடர்ந்து, தனியார் விமானங்கள் 15 நாட்களுக்கு முன்பதிவு செய்வதை நிறுத்திவிட்டன. இந்த ஓடுபாதை பணிகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி முடிவடையும்.

மார்ச் 6 முதல் 20 வரை ஓடுபாதை மேற்பரப்பில் இறுதியாக இரண்டு சிறந்த DAC-II அடுக்குகளை இடுவதற்கு 15 நாட்களுக்கு ஓடுபாதையை முழுமையாக மூட உள்ளதாக ஜம்மு விமானப்படை நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *