சர்ச்சில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தலித் சிறுமி.. உ.பியில் பரபரப்பு..

உத்திரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் 11 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேவாலய பாதிரியார் ஞாயிற்றுகிழமை உத்திரபிரதேச போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிரியாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உத்திரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் சண்டி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட லல்லியானா கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் 11 வயது தலித் சிறுமி பாதிரியாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து பாதிரியார் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாதிரியார் கன்னியாக்குமரியை சேர்ந்த 67 வயதுடைய ஆல்பர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தேவாலய வளாகத்தில் உள்ள பள்ளிக்கு தனது மகளை அழைத்து சென்றதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தனது புகாரில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவத்தன்று இரத்தப்போக்கு மற்றும் அவரது அந்தரங்க பகுதிகளில் காயங்களுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

Also Read: கொல்கத்தாவில் குழந்தைகள் இல்லம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள்.. போலிசார் விசாரணை..

பின்னர் தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொன்றுவிடுவதாக பாதிரியார் சிறுமியை மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பலாத்காரம், போக்சோ மற்றும் SC-ST ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் நீரஜ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஆகியோரின் DNA மாதிரி மாவட்ட மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளாதாக நீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Also Read: பாகிஸ்தானில் பட்டம் பெற்றவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை: AICTE அதிரடி

இரண்டு மாதிரிகளும் சோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் எனவும், தடவியல் குழு தேவாலயத்திற்கு வருகை தர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களிடையே இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் தேவாலயத்தை சுற்றி போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.