மொபைலில் சைபர் க்ரைம் தாக்குதல்.. புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய DRDO..

உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் மொபைல் போன்களில் உள்ள தீங்கிழைக்கும் மால்வேரை கண்டறிய ஒரு புதிய தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

மால்வேரை கண்டறிய செல்லுலார் ட்ராஃபிக் அம்சங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிவியல் பகுப்பாய்வு குழு (SAG) மற்றும் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (DTU) ஆகியவற்றின் நிபுணர்கள் இணைந்து ஒரு புதிய நெட்வொர்க் ட்ராஃபிக் பகுப்பாய்வு அடிப்படையிலான கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.

அரசாங்க தகவலின்படி, இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு 3,377 சைபர் குற்றங்கள் பதிவாகி இருந்தநிலையில், இது 2020ல் 50,035 ஆக அதிகரித்துள்ளது. நிபுணர்களின் கூற்றுபடி, ஸ்மார்ட்மொபைல் போன்களின் இயங்குதளம் பல தாக்குபவர்கள் மற்றும் தீம்பொருள் வடிவமைப்பாளர்களால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இதன் மூலம் அவர்கள் ரகசிய தகவலை பெற முயற்சிக்கின்றன. டிஜிட்டர் சாதனங்களை பாதுகாக்க இதுபோன்ற மால்வேரை கண்டறிவது ஸ்மார்ட்போன் பாதுகாப்பு பகுப்பாய்வின் முக்கிய செயல்பாடு ஆகும். இந்த மால்வேரின் துல்லியத்தன்மை 98.74 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக DRDO கூறியுள்ளது.

அறிவியல் பகுப்பாய்வு குழு மற்றும் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து 3 ஆராய்ச்சியாளர்களால் இந்த மால்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ட்ராஃபிக் அம்சம் இணைவு, வகைப்படுத்தி மதிப்பெண்-இணைவு, தீங்கிழைக்கும் பயன்பாடுகளை கண்டறிவதற்கான தீர்மான அளவுகோல்கள் மற்றும் குறிப்பு பயன்பாடுகள் என நான்கு தொகுதிகளை கொண்டுள்ளது.

ஹைபர்டெக்ஸ்ட் டிரான்ஸ்ஃபர் புரோட்டடோகால் (HTTP) போலல்லாமல் என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிராஃபிக்கிற்கு ஊடுருவாத டிரான்ஸ்மிஷன் கண்ட்ரோல் புரோட்டோகால் (TCP) பயன்படுத்தப்பட்டுள்ளது. DRDO அறிக்கையில், உலகளாவிய இணைய போக்குவரத்தில் மொபைல் சாதனங்கள் 55 சதவீதத்தை கொண்டுள்ளன.

இந்த மால்வேரை பகுப்பாய்வு செய்வது தீங்கிழைக்கும் பயன்பாடுகளை கண்டறிவதில் நம்பமுடியாத முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. ட்ராஃபிக்கை பகுப்பாய்வு செய்து நெட்வொர்க் ட்ராஃபிக்கில் உள்ள வடிவங்களை படிப்பதன் மூலம் அதை அடையாளம் காணவும், விசாரணைக்கான பிரித்தெடுக்கவும் முடிவும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.