கியூபாவை பயங்கரவாத ஆதரவு நாடாக மீண்டும் அறிவித்தது அமெரிக்கா

கியூபாவில் புரட்சியின் மூலம் கடந்த 1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ ஆட்சியை பிடித்தார். பிறகு கியூபா, அமெரிக்கா இடையில் பிரச்சனை அதிகரித்து தூதரக உறவு 1960-ல் முறிந்தது.

கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாக அமெரிக்கா அறிவித்தது. கியூபா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது.

கியூபா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி கியூபா நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா அபராதம் விதித்து வந்தது.

மேலும் கியூபாவுக்கு வெளிநாட்டு உதவிகள், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனையையும் தடை செய்தது.‌

இதனையடுத்து ஒபாமாவின் ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையே நட்புறவு மீண்டும் மலர்ந்ததால், பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா நீக்கியது.

இந்த நிலையில் ட்ரம்பின் பதவி காலம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூபாவை மீண்டும் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக அறிவித்துள்ளது. இதனை நேற்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக்பாம்பியோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தங்கள் நாட்டை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவித்ததற்கு கியூபா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 20ல் பதவியேற்கு ஜோ பைடன் ஒபாமா போல் தடையை நீக்குவாரா அல்லது ட்ரம்ப் விதித்த தடையை தொடர்வாரா என தெரியவில்லை. கியூமா மீதான பயங்கரவாத தடையை நீக்குவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *