பாகிஸ்தானில் நெருக்கடி: வாரத்தில் 5 நாள் வேலை, 6 மணிக்கு மேல் கடைகளை மூட உத்தரவு..?
பாகிஸ்தானில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் மின்சார சேமிப்பு தொடர்பாக சில நடவடிக்கைகள் தவிர, நாடு முழுவதும் மாலைக்குள் கடைகள் மற்றும் சந்தைகளை மூடுவதற்கான முன்மொழிவை மத்திய அமைச்சரவை விவாதிககும் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) மூத்த தலைவர் கமர் ஜமான் கைரா தெரிவித்துள்ளார்.
தற்போது பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பணவீக்கம், மின்சார பற்றாக்குறை, உணவு பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை என அனைத்திலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும் சிக்கன நடிவடிக்கைகளில், மின்சாரத்தை சேமிப்பது, எண்ணெய் நுகர்வை குறைப்பது, பணத்தை சேமிக்க அரசாங்கத்தின் செலவை குறைப்பது ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் மின்சாரத்தை சேமிக்கும் விதமாக வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என கூறப்படுகிறது.
அதாவது 4 நாட்கள் அலுவலகத்திலும், ஒரு நாள் வீட்டிலும் வேலை பார்க்க வேண்டும். தெரு மற்றும் பொது விளக்குகளை மாற்றுதல், வணிக சந்தைகளை முன்கூட்டியே மூடுதல். வாகனங்களை ஆண்டுக்கு இரண்டுமுறை ட்யூனிங் செய்தல், டிராக்டர்களை பழுதுபார்த்தல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஆம்புலன்ஸ்கள், கல்வி நிறுவனங்களுக்கான பேருந்துகள், திடக்கழிவு வாகனங்கள் போன்ற பயன்பாட்டு வாகனங்கள் தவிர அனைத்து வகையான வாகனங்களையும் மேம்பாட்டு பட்ஜெட்டில் இருந்து வாங்குவதற்கு தடை, வளர்ச்சி பணிகளை தவிர அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கவும் தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் மாலை நேரங்களில் கடைகள் மற்றும் வணிக வளாகங்களை மூடவும் முன்மொழியப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றின் போது மாலை நேரங்களில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் முடப்பட்டு இருந்ததால் இதனை சாத்தியப்படுத்துவது எளிது என கூறப்படுகிறது. மேம்பாட்டு திட்டங்களை தவிர அலுவலக தளவாடங்கள் வாங்க தடை.
Also Read: $10 பில்லியனுக்கு கிழே குறைந்த பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு.. கடன் வழங்குமா IMF..?
ஏசி, குளிர்சாதன பெட்டி, நகலெடுக்கும் இயந்திரங்கள் போன்ற உபகரணங்களை இறக்குமதி செய்யவும் தடை. நிதியுதவி சம்மந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளின் அனைத்து பயணங்களுக்கும் தடை. அரசு அலுவலகங்களில் வெளிநாட்டு பிரதிநிதிகள் தவிர மதிய உணவுகள், இரவு உணவுகள், டீ, காபி ஆகியவற்றிற்கு தடை மற்றும் பத்திரிக்கைகள், செய்தி தாள்கள் வாங்க தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
Also Read: வடகிழக்கு மாநில தலைநகரங்களை இணைக்க 1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ள ரயில்வே..
மேலும் நேரடி பயணத்தை தவிர்த்து ஜும் செயலியில் கூட்டத்தை நடத்துதல், பொதுநலனை தவிர விளம்பர செலவை குறைத்தல், காலியான மற்றும் தேவையற்ற பதவிகளை ஒழித்தல், அரசாங்க அதிகாரிகளின் மின்சாரம் மற்றும் எரிபொருளின் பயன்பாடு 30 முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்படும் என முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது. நாடு திவால் ஆவதை தடுக்கவும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை தடுக்கவும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே சமநிலையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கமர் ஜமான் கைரா தெரிவித்துள்ளார்.
Also Read: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சீன நாணயத்தில் வர்த்தகம் செய்யும் பாகிஸ்தான்..?