கொரோனா பரவல்: இந்த நிதியாண்டு சீனாவின் வளர்ச்சி குறையும் என கணிப்பு..

சீனாவின் ஷாங்காய் நகரில் தற்போது மீண்டும் கோவிட்-19 பரவ தொடங்கியுள்ளதால் நகரம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்க தொடங்கியுள்ளது. இதனால் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் நகரில் கிட்டதட்ட 2 மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருவதால் நகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள மக்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதால் வீட்டின் பால்கனியில் அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தற்போது பொருளாதார மந்த நிலையுடன் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் உள்நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.

Also Read: சீன நிறுவனங்களை வெளியேற்றிய இத்தாலி.. பின்னடைவில் சீனா, தைவானுக்கு வாய்ப்பு..?

ராய்ட்டர்ஸ் கருத்துகணிப்பின் படி, சீனாவின் வளர்ச்சி 2022ல் 5.0 சதவீதமாக குறையும் என கணித்துள்ளது. இதற்கு முன்பு ஜனவரி மாதம் வெளியிட்ட கருத்து கணிப்பில் சீனாவின் வளர்ச்சி 5.2 சதவிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் ஷாங்காய் நகரத்தின் ஊரடங்கு ஒரு மாதத்திற்கும், நாட்டின் மற்ற பிற பகுதிகளில் இரண்டு மாதத்திற்கும் ஊரடங்கு நீடித்தால், இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 3 சதவீதமாக குறையும் என பார்க்லேஸ் மதிப்பிட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஆண்டு முதல் முறையாக வங்கிகள் கையிருப்பாக வைத்திருக்க வேண்டிய பணத்தின் அளவை குறைப்பதாக அறிவித்தது.

Also Read: இந்திய கோதுமையை இறக்குமதி செய்ய உள்ள எகிப்து.. கோதுமை சப்ளையராக இந்தியா அங்கீகரிப்பு..!

பொருளாதார மந்தநிலையை குறைக்க 83.25 பில்லியன் டாலர் மதிப்பிலான யுவானை வெளியிட்டுள்ளது. சீனாவின் உள்நாட்டு தேவை குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறை பெரும் நெருக்கடியில் உள்ளது. பணவீக்கத்தை அதிகரிக்க சீனா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்திக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.