அன்னை தெரேசா சிறுமிகள் காப்பகத்தில் மதமாற்றம்.. வழக்கு பதிவு செய்தது குஜராத் காவல்துறை..

அன்னை தெரேசா தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்ட மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பானது வதோதரா நகரில் நடத்தி வரும் காப்பகத்தில் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து காப்பகத்தின் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக பாதுகாப்பு அதிகாரி மயங்க் திரிவேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மயங்க் திரிவேதி டிசம்பர் 9 அன்று மாவட்ட குழந்தைகள் நல குழுவின் தலைவருடன் மகர்புரா பகுதியில் உள்ள மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் சிறுமிகளுக்கான காப்பகத்கிற்கு சென்றார்.

அப்போது காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கில் கிறிஸ்துவ நூல்களை படிக்க வைப்பது, கிறிஸ்துவ நம்பிக்கையின் பிரார்த்தனைகளில் பங்கேற்க கட்டாயப்படுத்துவது போன்றவற்றை கண்டறிந்தனர்.

மேலும் சிறுமிகளை கழுத்தில் வலுகட்டாயமாக சிலுவைகளை அணிய வைத்து அவர்களை கிறிஸ்துவ மதத்தை தழுவ செய்துள்ளனர். சிறுமிகளின் அறைகளில் பைபிளை வைப்பது, பைபிளை படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது, கழுத்தில் சிலுவையை அணிய சொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தைகள் நல குழுவின் புகாரின் படி, இந்த அமைப்பு அங்கு வசிக்கும் இந்து பெண்களை கிறிஸ்துவ பாரம்பரிய படி கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும், அவர்கள் இந்து பெண்களாக இருந்தாலும் தங்கும் இடத்தில் பெண்களுக்கு வலுகட்டாயமாக அசைவ உணவு வழங்கப்படுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் முன்னாள் ஷியா வக்ஃப் வாரிய தலைவர்..

ஆனால் இதனை மறுத்துள்ள அன்னை தெரேசா அமைப்பு, மிஷினரிஸ் ஆஃப் சேரிட்டி நிர்வாகம் நாங்கள் எந்த மதமாற்றத்திலும் ஈடுபடவில்லை என மறுத்துள்ளது. எங்கள் காப்பகத்தில் 24 பெண்கள் உள்ளனர். நாங்கள் ஜெபித்து பிரார்த்தனை செய்வதை அவர்கள் பார்ப்பதால் அவர்களும் எங்கள் நடைமுறையை பின்பற்றுகிறார்கள். நாங்கள் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை. யாரையும் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தவில்லை என காப்பகம் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

Also Read: கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம்.. கிறிஸ்துவர்களுக்கு எதிரானது என காங்கிரஸ் எதிர்ப்பு..

திரிவேதியின் குற்றச்சாட்டுகளை ஒரு குழு ஆய்வு செய்த பின்னர் அந்த அமைப்பின் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறை உதவி ஆணையர் எஸ்பி குமாவத் தெரிவித்துள்ளார். இந்து மத உணர்வுகளை புண்படுத்துவது, இந்து பெண்களை மதமாற்றம் செய்வது போன்ற குற்றத்திற்காக IPC 295 A, 298, குஜராத் மத சட்டம் 2003 பிரிவு 3, பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை.. பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு..

Leave a Reply

Your email address will not be published.