ஜம்மு காஷ்மீர் இல்லாமல் இந்திய வரைபடம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஜி7 நாடுகள்..
இந்த மாத இறுதியில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்தியாவின் வரைபடம் தவறாக வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் தலைமையில் ஜி7 மாநாட்டை இந்த வருடம் அர்ஜென்டினா, செனகல், தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் நடத்த உள்ளன. இதில் ஜி7 நாடுகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைப்படத்தில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிரதேசங்கள் இடம் பெறவில்லை.
இதற்கு இந்தியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது, மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என இந்தியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கான தற்காலிக சிறப்பு சட்டம் 370 நீக்கப்பட்டு விட்டது.
இருப்பினும் ஜம்மு காஷ்மீர் பகுதி இல்லாமல் ஜி7 நாடுகள் வரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஜி7 நாடுகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இந்தியகள் குற்றம் சாட்டியுள்ளனர்.