ஷீரடி சாய்பாபா கோவிலை தகர்க்க சதித்திட்டம்.. 3 பாக். பயங்கரவாதிகளை கைது செய்தது குஜராத் காவல்துறை..

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளை குஜராத் ஏடிஎஸ் கைது செய்துள்ளது. அவர்கள் புகழ் பெற்ற சீரடி சாய்பாபா கோவிலை தகர்க்க திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. இதுவரை 6 மதகுருமார்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்ட்ராவின் புகழ்பெற்ற புனித யாத்திரை தளமான ஷீரடி சாய்பாபா கோவிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துபாயில் இருந்து வந்த பயங்கரவாதியை குஜராத் காவல்துறை கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூன்று பயங்கரவாதிகளில் ஒருவன் ஷீரடி கோவிலுக்கு சென்று வந்ததை ஒப்புக்கொண்டுளளான்.

ஷீரடியை பூர்விகமாக கொண்டவரும் தற்போது டெல்லியில் வீடு மற்றும் அலுவலகத்துடன் செயல்பட்டு வரும் சுதர்சன் டிவி ஹிந்தி செய்தி சேனலின் ஆசிரியர் மற்றும் அவரது வீடு மற்றும் அலுவலகத்தையும் பயங்கரவாதிகள் நோட்டமிட்டுள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தையும் பயங்கரவாதிகள் நோட்டமிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர்கள், மௌலானா ஷபீர் பதான், அயூப் ஜாப்ரவாலா, மௌலானா கனி உஸ்மானி ஆகியோர் கைது செய்யப்பட்டுளளனர். இவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஷீரடி கோவிலுக்கு ஏற்கனவே பலமுறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த நிலையில் தற்போது பயங்கரவாதியை குஜராத் போலிசார் கைது செய்துள்ள நிலையில், மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஷீரடி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. குஜராத் ஏடிஎஸ் அமைப்பின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள். தற்போது கைது செய்யப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கடுமையாக விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.