காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ரிஷிபுரா பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கி சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி பாதுகாப்பு படைவீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்..

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாகவே இந்துக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பயங்கரவாத தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ரிஷிபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ரிஷிபுரா பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பல மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி நிசர் கான்டே சுட்டுக் கொல்லப்பட்டான்.

தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 3 பேரும், பொதுமக்கள் ஒருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 4 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.