பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புக்கும் போலிசாருக்கும் இடையே மோதல்.. போலிசார் உட்பட 5 பேர் பலி..

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் 5 பாகிஸ்தான் போலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தெக்ரிக்-இ-லபாயக் (TLP) அந்த அமைப்பின் தலைவர் சாத் ரிஸ்வியை விடுதலை செய்யவும், பிரெஞ்சு தூதர் மற்றும் பிரெஞ்சுகாரர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றவும் கோரி TLP அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TLP தலைவர் சாத் ரிஸ்வி பிரான்சில் வெளியிடப்பட்ட நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையிலான கேலிசித்திரத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அப்போது பஞ்சாப் மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் TLP அமைப்பை சேர்ந்த சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் சாத் ரிஸ்வியை விடுதலை செய்யக்கோரியும் பிரான்ஸ் தூதரை வெளியேற்றக்கோரி சதோக் மற்றும் குஜ்ரன்வாலா என்னும் இடத்தில் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்தினர்.

அப்போது அவர்கள் தலைநகரை நோக்கி முன்னேற விடாமல் சதோக் என்னும் இடத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் காவல்துறையினருக்கும் TLP அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலிசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

இருப்பினும் மோதல் பெரிதாக வெடித்ததால் இருதரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு போலிஸ் அதிகாரி உயிரிழந்தார். TLP சார்பில் நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Also Read: “நாங்கள் வென்றுவிட்டோம்” பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை.. பள்ளியில் இருந்து நீக்கம்..

இதேபோல் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 15 TLP அமைபினரும், 5 காவல்துறையினரும் உயிரிழந்தனர். தற்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டை அடுத்து TLP அமைப்பின் அலுவலக தலைவர் இப்னே-இ-இஸ்மாயில் கூறுகையில், அமைதியாக போராட்டம் நடத்திய தங்கள் மீது பாகிஸ்தான் காவல் துறையினர் தாக்கியதாக கூறினார். மேலும் ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?

எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இம்ரான்கான் பதவியில் இருந்து அகற்றப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டகாரர்கள் இஸ்லாமாபாத் நோக்கி முன்னேறாமல் இருக்க மேலும் 10,000 போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவரம் நடக்கும் இடத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Also Read: அகல பாதாளத்திற்கு செல்லும் பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு.. வரலாறு காணாத வீழ்ச்சி..

Leave a Reply

Your email address will not be published.