ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் தாலிபானுக்கும் இடையே மோதல்.. எச்சரித்த தாலிபான்கள்..

எல்லை பிரச்சனை தொடர்பாக கடந்த ஒரு வாரத்திற்குள் பாகிஸ்தானுக்கும் தாலிபான்களுக்கும் இடையே இரண்டாவது முறையாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் டுராண்ட் லைனில் வேலி அமைப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஆப்கானிஸ்தானின் உள்ளுர் செய்தி நிறுவனமான காமா நியூஸ் தகவலின்படி, ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு நிம்ரோஸ் மாகாணத்தில் சார்போர்ஜாக் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் இதற்கு முன் கடந்த மாதம் 22 ஆம் தேதியும் வேலி அமைப்பது தொடர்பாக கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் இருதரப்பு படைகளும் மோதிக்கொண்டன. செய்தி சேனலின் அறிக்கையின் படி, பாகிஸ்தான் படைகள் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் சுமார் 10 கிலோமீட்டர் உள்ளே நுழைந்து வேலி அமைக்க முயன்றனர்.

அப்போது அங்கு வந்த தாலிபான்கள் பாகிஸ்தான் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கம்பிகளை வேரோடு பிடுங்கி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எல்லையில் மீண்டும் கம்பிகளை நிறுவ முயன்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாலிபான்கள் பாகிஸ்தான் படையினரை எச்சரித்துள்ளனர்.

டுராண்ட் லைன் ஆனது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே 2,600 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லையாகும். இந்த டுராண்ட் பெயர் 1893 நவம்பர் 12 அன்று ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவிற்கு இடையே சர்வதேச எல்லை அமைப்பதற்காக, அப்போதைய ஆப்கன் ஆட்சியாளர் அமீர் அப்துல் ரஹ்மானுடன் பிரிட்டிஷ் சிவில் அதிகாரி சர் ஹென்றி மோர்டிமர் டுராண்ட் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

Also Read: தப்ளிக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ஆதரவு..?

அதனால் டுராண்ட் பெயரே இந்த எல்லைக்கு வைக்கப்பட்டது. இந்த நிலையில் தாலிபானின் தலைமை செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், முந்தைய ஆப்கானிஸ்தான் அரசாங்கங்களும் புதிய தாலிபான் அரசும் பாகிஸ்தான் எல்லையில் வேலி அமைப்பதை எதிர்க்கிறது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கோட்டை சட்டபூர்வமாக தாலிபானும் இன்னும் அங்கீககிக்கவில்லை என முஜாஹித் கூறியுள்ளார்.

Also Read: சவுதி தூதரை அவமதித்த பாகிஸ்தான் அமைச்சர்.. இம்ரான்கானுக்கு குவியும் கண்டனம்..

மற்றொரு செய்தியில், டிசம்பர் 31 அன்று பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தாலிபான் அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புடன் ஏற்பட்ட மோதலில் நான்கு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள டேங்க் மற்றும் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தின் தாலிபான்களின் மறைவிடத்தில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் சோதனை நடத்திய போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் TTP தரப்பில் இருவரும் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் நான்கு பேரும் உயிரிழந்தனர்.

Also Read: தாலிபான்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல்..? காபூலில் பதற்றம்..

Leave a Reply

Your email address will not be published.