சீன கடற்பரப்பில் திடீரென மறையும் சீன கப்பல்.. அச்சத்தில் உலக நாடுகள்..

இந்த மாத துவக்கத்தில் இருந்து சீன சரக்கு கப்பல்கள் தொழில் கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து திடீரென மறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த வருடம் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிக்கப்படும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

சீன கடலில் சீன சரக்கு கப்பல்கள் தொழில் கண்காணிப்பு அமைப்புகளுக்கு எவ்வித தகவல்களும் அளிக்காததால் கப்பல் தொடர்பான தகவலை சேகரிக்கும் நிறுவனங்கள் குழம்பி போய் உள்ளனர். அனைத்து சரக்கு கப்பல்களிலும் AIS (Automatic Identification System) ட்ரான்ஸ்லீவர் பொருத்தப்பட்டிருப்பதால் ஷிப்பிங் டேட்டா நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள சரக்கு கப்பல்களை கண்காணித்து வருகின்றனர்.

இதனால் இந்த AIS மூலம் கப்பலின் நிலை, வேகம், பெயர், எங்கு இருக்கின்றன போன்ற தகவல்களை திரட்டி அவை போய் சேரக்கூடிய அல்லது உலகெங்கிலும் உள்ள மற்ற துறைமுக நிலையங்களுக்கு தகவல் அளிக்கின்றன. இதன் மூலம் அந்த கப்பலை துறைமுகங்களுக்குள் அனுமதிக்கலாமா வேண்டாமா என துறைமுகங்கள் முடிவு செய்யும்.

ஏனெனில் ஏற்கனவே பல கப்பல்கள் சரக்குகளை ஏற்றவோ அல்லது இறக்கவோ செய்வதால் நெரிசல் ஏற்படும் என்பதற்காக இந்த AIS மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. உலகின் இரண்டாவது பொருளாதார நாடான சீனாவில் சமீப காலமாக 90 சதவீத சீனாவின் சரக்கு கப்பல் பற்றிய தகவல் மட்டும் மாயமாக மறைந்து விடுகின்றன என்று வெஷில்ஸ் வேல்யூவின் தலைமை வர்த்தக ஆய்வாளர் சார்லோட் குக் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணங்களை தேடியபோது, நவம்பர் 1 ஆம் தேதி முதல் சீனாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தனிப்பட்ட தகவல்கள் சீனாவை விட்டு வெளியேறும் முன் தரவு நிறுவனங்கள் சீன அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் சீனாவின் தனிப்பட்ட தகவல்கள் வெளிநாடுகளின் கைகளில் கிடைக்காமல் தடுத்து விடலாம் என சீனா நினைக்கிறது.

இந்த தனிப்பட்ட சட்டம் சரக்கு கப்பல்களுக்கு இல்லை என்றாலும், சீன அதிகாரிகள் அவற்றை தடுத்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக AIS ட்ரான்ஸ்லீவர் மூலம் டேட்டா சேகரிப்பு நிறுவனங்கள் நேரடியாக சரக்கு கப்பலில் உள்ள AIS மூலமாகவே தகவல்களை எடுத்து கொள்ளும். ஆனால் சீன கப்பல்களில் மட்டும் தகவல்கள் நேரடியாக சீன சரக்கு கப்பல்கள் தெரிவிக்காமல் அவை சீனாவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்கின்றன.

அந்த கட்டுப்பாட்டு மையங்கள் சீன கப்பல் பற்றிய தகவல்களை உலகெங்கிலும் உள்ள மற்ற கப்பல் தகவல் திரட்டும் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன. இதனால் தனிப்பட்ட பாதுகாப்பு சட்டம் அமலானதில் இருந்து சீன கட்டுப்பாட்டு நிறுவனங்கள் சரக்கு கப்பல் பற்றிய தகவல்களை மற்ற கப்பல் தரவு சேகரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவது இல்லை.

இதனால் சீனாவிற்கு பொருட்கள் ஆர்டர் கொடுத்தவர்கள் பொருட்களை ஏற்றிகொண்டு கப்பல் எங்கு இருக்குறது, எப்போது வரும், எந்த துறைமுகத்திற்கு வரும் என தெரியாமல் உள்ளனர். இதனால் மிகப்பெரிய அளவில் விநியோக சங்கிலி பாதிக்கப்படும் என சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Also Read: மீண்டும் ஒரு பனிப்போர் ஏற்படும்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை..

கப்பல்கள் பற்றிய தகவல்களை சீன கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்காவிட்டாலும் செயற்கைக்கோள் மூலமாகவும் தகவல்களை திரட்டலாம். ஆனால் அவை தரையில் உள்ளதுபோல் தெளிவாக இருக்காது. ஒரு சிறந்த மற்றும் அதிக தரம் வாய்ந்த படத்தை பெற நிலப்பரப்பு தேவை என AIS நெட்வொர்க் குழு தலைவர் அனஸ்டாசிஸ் டூரோஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வர உள்ள நிலையில் சீனாவின் இந்த தனியுரிமை பாதுகாப்பு சட்டத்தால் உலக அளவில் விநியோக சங்கிலியில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது. கப்பல் நிறுவனங்கள் கப்பல் இயக்கத்தை கணிக்கவும், பருவகால போக்குகளை கண்காணிக்கவும், துறைமுக செயல்திறனை மேம்படுத்தவும் இந்த AIS தரவை தான் பெரிதும் நம்பி உள்ளன.

Also Read: சீனாவை தாக்கிய குட்டி யானை.. இந்தியா தான் காரணம் என சீனா கதறல்..

நிலக்கரி மற்றும் இரும்புத்தாது இறக்குமதியாளர்களில் முக்கிய நாடாகவும், கொள்கலன்களின் மிகப்பெரும் ஏற்றுமதியாளராக உள்ள சீனாவின் இந்த நடவடிக்கையால் சீனாக்குள்ளும் விநியோக சங்கிலி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. முக்கிய தொழிற்நுட்பங்கள் மீது அமெரிக்க தடைகள் போன்ற வெளிப்புற அச்சுருத்தல்கள் இருப்பதால், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய இதுபோன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்துவருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: பாகிஸ்தானில் சீனாவுக்கு எதிராக போராட்டம்.. பின்னடைவில் பெல்ட் அண்ட் ரோட் திட்டம்..

Leave a Reply

Your email address will not be published.