இந்தியாவை உளவு பார்த்த சீன பெண் உளவாளி டெல்லியில் கைது..!

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 50 வயதான சீன பெண் ஒருவரை டெல்லி போலிசார் கைது செய்துள்ளனர். பௌத்த துறவி என கூறிய சீன பெண் காய் ரூவோ, சீன உளவாளியாக இருக்கலாம் என போலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அவர் தன்னை ஒரு நேபாள் நாட்டவராக காட்டிகொண்டு டோலா லாமா என்ற பெயரில் இந்தியாவில் வசித்து வந்துள்ளார். அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்பதற்கு நேபாள் அடையாள அட்டையும் வைத்துள்ளார். சரளமாக ஆங்கிலத்தில் பேசும் காய் ரூவோவிற்கு நேபாளி மொழி தெரியாது.

அவர் சரளமாக சீன மொழியும் பேசுகிறார். பின்னர் போலிசார் நடத்திய குறுக்கு விசாரணையில், அவரிடம் சீன பாஸ்போர்ட் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் 2020 ஆம் ஆண்டு மேற்கு வங்கம் வழியாக நேபாளத்திற்கு சட்டவிரோதமாக சென்றுள்ளார். பின்னர் நேபாள அடையாள அட்டையை பெற்று இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.

அவர் சீனாவின் ஹைனான் மாகாணத்தை சேர்ந்தவர் என போலிசார் தெரிவித்துள்ளனர். அவர் புத்த துறவி என்பதால் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அவரை கொலை செய்ய விரும்புவதாகவும், அதனால் சீனாவை விட்டு நேபாளத்திற்கு தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் உளவு பார்த்ததையும், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதையும், நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த முயன்றதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து போலிசார் இந்திய தண்டனை சட்டம் 120-பி, 419, 420, 467, 474 ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

காய் ரூவோ சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால், அவர் PFI அமைப்புடன் தொடர்பில் இருந்தாரா என்பதை புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும் என போலிசார் தெரிவித்துள்ளனர். சீன உளவாளி கைது செய்யப்பட்டது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.