சீனாவின் கப்பல் பொறி.. மற்றொரு நெருக்கடியை சந்திக்கும் உலக நாடுகள்..

சீனா அதன் துறைமுகங்களில் வேண்டுமேன்றே பல வெளிநாட்டு சரக்கு கப்பல்களை நிறுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று காரணமாகவே நிறுத்தி வைத்திருப்பதாக சீனா விளக்கம் அளித்துள்ளது.

தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் எரிவாயு விலை உயர்வு மற்றும் உணவு பற்றாக்குறை நெருக்கடி போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் சரக்கு கப்பல் தேக்கம் குறித்த பிரச்சனைகளை அந்த நாடுகள் பெரிய பிரச்சனையாக எடுத்துகொள்ளவில்லை.

போர் காரணமாக எரிவாயு விலைகள் ஐரோப்பிய கண்டத்தில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளில் எரிபொருள் மற்றும் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் அவர்களுக்கு மற்றொரு நெருக்கடியாக அந்நாட்டின் அல்லது அந்நாட்டிற்கு சரக்குகளை எடுத்து செல்லும் கப்பல்கள் சீன துறைமுகத்தில் தேங்கி நிற்கின்றன. இது உலக அளவில் விநியோக சங்கிலியில் நெருக்கடியை உருவாக்கும் என கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவே சீனா இதுபோல் செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

Also Read: இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி போரை நிறுத்த வேண்டும்: டென்மார்க்

சீனாவின் அனைத்து துறைமுகங்களும் போக்குவரத்து நெரிசல்களை எதிர்கொள்கின்றன. ராயல் பேங்க் ஆப் கனடாவின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் உலகளாவிய சரக்கு கப்பல்களில் ஐந்தில் ஒரு பங்கு பல்வேறு துறைமுகங்களில் நெரிசலில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் துறைமுகத்தில் 344 கப்பல்கள் துறைமுகத்திற்கு வருவதாக காத்திருக்கின்றன.

Also Read: ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் ஆற்றலிருந்து இந்தியா விலக பிரான்ஸ் உதவும்..!

இந்த நெருக்கடியால் சீனாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு தற்போது 74 நாட்கள் அதிகமாகிறது. ஐரோப்பாவிலும் கப்பல்கள் நான்கு நாட்கள் தாமதத்தை சந்திக்கின்றன. ரஷ்யா உக்ரைன் மோதலால் உலகமே தடுமாறி கொண்டிருக்கும் வேளையில் சீனா சரக்கு கப்பல்களை நிறுத்தி வைத்திருப்பதால் மேலும் நெருக்கடி உருவாகக்கூடும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.