சாலமன் தீவை தொடர்ந்து மற்றொரு பசுபிக் நாட்டுடன் சீனா பாதுகாப்பு ஒப்பந்தம்..?

கடந்த மாதம் சாலமன் தீவுகளுடன் சீனா பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் தற்போது கிரிபாட்டியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சீனா பசுபிக் நாடான சாலமன் தீவுடன் கடந்த மாதம் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கவலை தெரிவித்தன. சாலமன் தீவு தைவானை ஆதரித்த நிலையில், தைவான் இராஜதந்திர உறவுகளை கைவிட்டு ஓரு சீன கொள்கையை ஆதரித்தது.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருநாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்ட ஆவணத்தின் இறுதி பதிப்பு பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வரைவு பதிப்பில் ஆஸ்திரேலியாவில் இருந்து 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலமன் தீவில் சீன கப்பலை அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

Also Read: உலகளவில் வலிமையான விமானப்படை.. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..

தற்போது அதே பாணியில் மற்றொரு பசுபிக் நாடான கிரிபாட்டியுடன் சீனா பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டு கிரிபாட்டி தைவானின் இராஜதந்திர உறவுகளை முறித்து சீனாவின் ஒரு சீன கொள்கையை ஆதரிக்க தொடங்கியது.

Also Read: இந்தியா 2026 ஆம் ஆண்டே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என IMF கணிப்பு..!

தற்போது அமெரிக்க அதிபர் ஜோபிடன் குவாட் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள நிலையில், சீனாவால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து இருநாட்டின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் குவாட் கூட்டத்திலும் சீனா குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Also Read: எகிப்தை தொடர்ந்து இந்தியாவிடம் கோதுமை கேட்கும் மேலும் 12 நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.