பின்னடைவில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம்.. திட்டத்தை ரத்து செய்யும் நாடுகள்..

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது. பல நாடுகளில் சீனா முதலீடு செய்யப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது அல்லது திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் (BRI) திட்டத்தில் இணைந்துள்ள நாடுகளில் சீனா 52 நிலக்கரி சுரங்கம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டு அந்தந்த நாடுகளில் முதலீடு செய்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சில நாடுகள் திட்டத்தை ரத்து செய்துவிட்டன.

அதிகபட்சமாக ஜிம்பாப்வே 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள திட்டத்தை ரத்து செய்துள்ளது. அதற்கு அடுத்ததாக ரஷ்யா 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள திட்டத்தை ரத்து செய்துள்ளது அல்லது கிடப்பில் போட்டுள்ளது. அடுத்ததாக கம்போடியா 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை ரத்து செய்துள்ளது.

கென்யாவில் சீனாவிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால் ஒப்பந்தத்தில் கூறியப்படி ICBC வங்கியால் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வழங்க இயலவில்லை. நிலக்கரி ஆலைகளுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்யுமாறு சீனாவை பங்களாதேஷ் கேட்டுக்கொண்டுள்ளது.

நிலக்கரி மூலம் 6.5 GW மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய திட்டத்தை எகிப்து அரசு ரத்து செய்துள்ளது. BRI நாடுகளில் கிட்டதட்ட 65 பில்லியன் மதிப்பிலான நிலக்கரி மின் உற்பத்தி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல நாடுகளில் சீனாவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஐநா சபையில் சில நாட்களுக்கு முன் உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங் தனது நாடு மற்ற நாடுகளில் நிலக்கரி உற்பத்தியில் ஈடுபடாது என உறுதியளித்தார். ஆனால் திட்டம் ரத்து செய்யப்பட்டதாலையே சீன அதிபர் இவ்வாறு கூறியதாக செய்திகள் வெளிவருகின்றன.

Also Read: உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் ஹைப்பர்லூப்..? மும்பை-புனே வெறும் 20 நிமிடத்தில் பயணம்.

இதே போல் BRI திட்டத்தில் உள்ள நாடுகளான ஜிம்பாப்வே, ரஷ்யா, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, கிரீஸ், சூடான், காங்கோ, எகிப்து, போட்ஸ்வானா, தன்சானியா, ருமேனியா, நைஜிரியா, கானா, ஹெர்சகோவினா, மலாவி, போஸ்னியா, மொசாம்பிக் போன்ற நாடுகளும் நிலக்கரியில் இருந்து மின்சாரம் எடுக்கும் சீன நிறுவனங்களின் திட்டத்தை ரத்து செய்துள்ளன அல்லது கிடப்பில் போட்டுள்ளன.

Also Read: இந்தியாவின் வளர்ச்சி நிலையானது.. மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணிப்பு..

இதனால் சீனாவிற்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவை விட்டு பல தனியார் நிறுவனங்கள் வெளியேறுவது. பணக்காரர்களிடம் இருந்து ஏழைகளுக்கு பணத்தை பகிர்ந்தளிப்பது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா என உலக நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கடைபிடிப்பது போன்றவை சீனாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் பெரும் நிறுவனங்கள்.. இந்தியாவில் கால்பதிக்கும் ஆப்பிள்..

Leave a Reply

Your email address will not be published.