ஐ.நாவில் ஜின்ஜியாங் மனித உரிமை மீறல் அறிக்கை வெளியாவதை தடுக்க முயலும் சீனா..

சீனாவின் ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல் குறித்த அறிக்கையை கலைத்துவிடுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தலைவரிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜின்ஜியாங் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டாம் அல்லது அறிக்கையை கலைத்துவிடுமாறு சீனா ஐ.நா மனித உரிமை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இது அந்த கடிதத்தை பெற்ற 3 நாடுகளின் தூதர்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை குழுவின் தலைவர் மிச்செல் பச்செலெட், இந்த ஆண்டு மே மாதம் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது மிச்செல் பச்செலட் சீனாவுடன் மிகவும் மென்மையாக நடந்து கொண்டதாக பரவலாக விமர்சனம் எழுந்தது. மேலும் தனிப்பட்ட காரணங்களுக்கான இரண்டாவது முறையாக பதவிக்கு வருவதை தவிர்ப்பதாக கூறியுள்ளார்.

அவர் சீனாவில் இருந்து புறப்படுவதற்கு முன் ஜின்ஜியாங் குறித்து ஆகஸ்ட் மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என உறுதி அளித்தார். உய்கூர் மற்றும் திபெத் மக்கள் தடுப்பு முகாம்களில் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

சீனாவால் எழுதப்பட்ட கடிதத்தில், ஜின்ஜியாங் அறிக்கை குறித்து கவலையை தெரிவித்துள்ளது மற்றம் அதனை வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது என மூன்று நாட்டு தூதர்கள் மற்றும் ஒரு உரிமை நிபுணர் இந்த தகவலை கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.