நமது நிலத்தை கைப்பற்ற நினைத்தால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நமது சுயமரியாதையை புண்படுத்தவோ அல்லது நமது நிலத்தை கைப்பற்றவோ சீனா நினைத்தால் அதற்கு முழு வலிமையுடன் பதிலடி தரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனா உடனான இந்தியாவின் உறவு குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில், பெய்ஜிங்கை தனது எதிரியாக இந்தியா கருதவில்லை என்றும், ஆனால் நமது சுயமரியாதையை புண்படுத்தவோ அல்லது நமது நிலத்தை கைப்பற்றவோ சீனா முயன்றால் அதற்கு முழு வலிமையுடன் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மோடி அரசாங்கம் ஆட்சியில் 8 ஆண்டுகள் நிறைவு செய்ததை குறித்து பேசிய ராஜ்நாத்சிங், சீனா உடனான தற்போதைய சூழ்நிலையின் பின்னணியில், பெய்ஜிங் அதன் நடவடிக்கைகள் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் அது செய்யாது, அவர்களின் விரிவாக்க கொள்கையே இதற்கு அடிப்படை என அமைச்சர் கூறியுள்ளார்.

லடாக் மோதல் அவர்களுக்கு பாடம் கற்பித்திருக்க கூடும். நமது ஆயுத படைகளின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். சீனா எல்லையில் உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அவர்கள் அதை தங்கள் நாட்டு எல்லை பகுதியில் செய்துள்ளனர். நமது எல்லைக்குள் எதுவும் செய்யவில்லை, அவ்வாறு செய்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.

Also Read: வெளியே கசிந்த இராணுவ ரகசியம்.. 4 உயர் இராணுவ அதிகாரிகளை தூக்கிலிட்ட சீனா..

மேலும் அமைச்சர் கூறுகையில், மோடிக்கு சிறந்த கற்பனைத்திறன் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை உள்ளது. ஊழலை ஒருபோதும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. பிரதமர் மோடி இந்த அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என தெரிவித்த ராஜ்நாத்சிங், ஊழலை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக யாராலும் கூற முடியாது என தெரிவித்தார்.

Also Read: இந்திய இராணுவத்திற்கு 100 ஹோவிட்சர்களை வழங்க உள்ள பாரத் ஃபோர்ஜ்..?

சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழி தாக்குதல் போன்ற முடிவுகளை பிரதமர் மோடியால் மட்டுமே எடுக்க முடியும், கடுமையான முடிவுகளை எடுப்பது பிரதமர் மோடியின் இயல்பு, மோடி நம் அனைவரிடமும் மிகவும் பிரபலமான தலைவர் என்பதை நான் எப்போதும் அறிவேன் என பிரதமர் மோடியை அமைச்சர் பாராட்டினார்.

Also Read: ஏவுகணை, ராக்கெட் பற்றிய தகவல்களை பாக். ஏஜென்டுக்கு அனுப்பிய இந்திய இராணுவ வீரர்..

Leave a Reply

Your email address will not be published.