திபெத்தில் ஏவுகணைகளை சேமிக்கும் புதிய இராணுவ தளவாட மையத்தை உருவாக்கி வரும் சீனா! புதிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது

திபெத்தில் சீனா நிலத்துக்கு அடியில் புதிய இராணுவ கட்டமைப்பை உருவாக்கி வருவது புதிய செயற்கைகோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. ஏவுகணையை சேமித்து வைக்கவும், இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த உள்கட்டமைப்பை சீனா மேம்படுத்தி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Xigaze விமான நிலையத்திற்கு தெற்கே சீனா இந்த உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. புதிய செயற்கைக்கோள் படங்கள் படி, சீனா திபெத்தில் Xigatse விமான நிலையத்திற்கு அருகில் ஒரு பெரிய இராணுவ தளவாட மையத்தை உருவாக்கி வருகிறது. சீன அதிபரின் உத்தரவின் பேரில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

திங்களன்று ட்விட்டரில் @detresfa என்ற புலனாய்வு பகுப்பாய்வாளர் இந்த செயற்கைகோள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்த செயற்கைகோள் புகைப்படத்தின் படி நிலத்துக்கு கீழ் ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்கான இடம், இராணுவ ஆதரவு கட்டிடம், ஒரு புதிய ரயில் நிலையம், புதிய ரயில் பாதை, மற்றும் எரிபொருள் குவியல் ஆகியவை உள்ளன.

ஃபோர்ஸ் அனாலிசிஸ்க்கான பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட பாதுகாப்பு பகுப்பாய்வாளரான சிம் டாக் கூறுகையில், திபெத் தன்னாட்சி பிராந்தியம் முழுவதும் சீனா கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாகவும், சீனாவின் பிற பகுதியில் இருந்து திபெத்திற்கும், திபெத்திற்கு உள்ளும் படைகளை விரைவாக நகர்த்த இந்த கட்டமைப்புகளை சீனா உருவாக்குவதாக கூறுகிறார். மேலும் ராணுவ நடவடிக்கை வசதிகளுக்காக அக்சாய் சின் முதல் அருணாச்சல்பிரதேசம் வரை புதிய கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாக கூறுகிறார்.

திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய நகரமான Xigatse விமான நிலையத்திற்கு அருகே புதிதாக, நிலத்துக்கு அடியில் இந்த கட்டமைப்பை சீனா உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *