கென்யாவில் தனது இரண்டாவது இராணுவ தளத்தை அமைத்து வரும் சீனா..? இந்தியாவை தாக்க திட்டமா..?

சீனா ஆப்ரிக்க நாடான கென்யாவில் தனது இராணுவ தளத்தை அமைத்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை ஆகும்.

சீனா ஏற்கனவே ஆப்ரிக்க நாடான டிஜிபூட்டியில் 2017 ஆம் ஆண்டு தனது முதல் இராணுவ தளத்தை அமைத்தது. இந்த இராணுவ தளம் மூலம் இந்திய பெருங்கடல் மற்றும் அரேபியன் கடலுக்கு சென்று வர முடியும். இருப்பினும் டிஜிபூட்டியில் இருந்து இந்திய பெருங்கடலை அடைய சிறிது கால அவகாசம் எடுக்கும்.

இந்திய பெருங்கடலுக்கு விரைவாக செல்ல கென்யாவில் தற்போது சீனா கடற்படை தளத்தை அமைத்து வருகிறது. இதனால் இந்தியா கிழக்கு மற்றும் மேற்கு என இருபுறமும் சீனாவை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எப்போதும் சீனாவின் கப்பல்கள் தென்சீனக்கடலில் இருந்து மலாக்கா கடல் வழியாகவே வரும். அப்படி வரும் போது அந்தமானில் உள்ள இந்திய இராணுவ தளம் மூலம் எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இதனால் சீனா தற்போது கென்யாவில் தனது இரண்டாவது இராணுவ தளத்தை அமைக்க உள்ளது.

சீனா கென்யாவை தனது கடன் வலையில் சிக்க வைத்து அந்த நாட்டை தன் கட்டுபாட்டில் கொண்டு வந்து இந்த இராணுவ தளத்தை அமைத்து வருவதாக கூறப்படுகிறது. டிஜிபூட்டியில் கவச வாகனம் மற்றும் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சீனா கூறுகையில் கென்யா தளமானது தளவாட வசதிக்காகவும், வர்த்தகத்திற்காகவும் கட்டமைத்து வருவதாக கூறியுள்ளது.

Also Read: எதிரிகளின் விமானதளங்களை தாக்கி அளிக்கும் SAAW ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

இதனை அமெரிக்க பாதுகாப்புத்துறை தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலமாகவே சீனா கென்யாவில் இராணுவ தளத்தை கட்டமைத்து வருவது மற்ற நாடுகளுக்கு தெரிய வந்துள்ளது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் சீனா ஆப்ரிக்க நாடுகள் முழுவதையும் தனது கடன் வலையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது.

Also Read: ரஷ்யாவிடம் இருந்து முதல் நாடாக S-500 ஏவுகணை அமைப்பை வாங்குகிறது இந்தியா..?

கென்யாவில் இராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் மற்ற ஆப்ரிக்க நாடுகளில் அதன் இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை அதிகரிக்க விரும்புவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. சீனா கென்யாவில் நைரோபி மற்றும் மொம்பாசாவுக்கு இடையே இரயில் பாதையை கட்டமைத்து வருகிறது. மேலும் பல துறைகளில் பல மில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாகிஸ்தானின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பதவி உயர்வு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *