அட்லாண்டிக் நாடான ஈக்குவோடரியல் கினியாவில் இராணுவ தளத்தை அமைக்க உள்ள சீனா.. இந்தியாவுக்கு ஆபத்தா..?

சீனா அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மத்திய ஆப்ரிக்க நாடான ஈக்குவோடரியல் கினியாவில் தனது இராணுவ தளத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் என்று வந்தால் இங்கிருந்து இந்திய பெருங்கடல், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை தாக்க முடியும் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சீனா ஆப்ரிக்க நாடான டிஜிபூட்டில் இராணுவ தளத்தை கொண்டுள்ளது. சமீபத்தில் இந்திய பெருங்கடல் அருகே இருக்கும் ஆப்ரிக்க நாடான கென்யாவில் இராணுவ தளம் அமைத்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சீனா ரகசியமாக மேற்கொண்ட இராணுவ தள கட்டமைப்பு அமெரிக்க தலையீட்டால் நிறுத்தப்பட்டது.

கென்யாவில் ஏற்கனவே அமெரிக்க இராணுவ தளம் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தலையீட்டால் சீன கடற்படை தளம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டம் ரத்து செய்வது பற்றி இதுவரை கென்ய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது சீனா மத்திய ஆப்ரிக்க நாடான ஈக்குவோடரியல் கினியாவில் இராணுவ தளம் அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஈக்குவோடரியல் கினியாவின் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தலைநகர் மலபோ நகரில் இராணுவ தளம் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் பைனர் அக்டோபர் மாதம் ஈக்குவோடரியல் கினியா நாட்டிற்கு சென்று அந்த நாட்டு ஜனாதிபதி தியோடோரோ ஒபியாங் நுகுமா எம்பாசோகோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் ஜனாதிபதியின் மகன் மற்றும் துணை ஜனாதிபதியான நுகுமா ஒபியாங் மாங்குவை சந்தித்து சீனாவின் கோரிக்கை திட்டத்தை நிராகரிக்கும் படி கேட்டுக்கொண்டார். சீனாவை போலவே கினியாவிலும் ஒரு கட்சி ஆட்சி முறையே உள்ளது. கம்போடியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யாவை தொடர்ந்து தற்போது ஈக்குவோடரியல் கினியாவிலும் சீனாவின் முயற்சிக்கு அமெரிக்கா முட்டுகட்டை போட்டுள்ளது.

Also Read: தைவான் அருகே சீன நீர்மூழ்கி கப்பலை தாக்கிய அமெரிக்கா.. தென்சீனக்கடலில் பரபரப்பு..

கினியா நாடு அமெரிக்காவுடன் நல்ல உறவில் உள்ளது. மேலும் போர் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறது. வெள்ளை மாளிகையில் இருந்து கினியாவுக்கு வந்த செய்தியில், கினியா சீனா உடனான உறவை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என கூறவில்லை. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவுக்கு சீனாவுடன் உறவு வைத்துகொள்ள வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Also Read: உலகின் முதல் 100 ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் இடம் பிடித்த 3 இந்திய நிறுவனங்கள்..

ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தைவான் பிரச்சனை, குளிர்கால ஒலிம்பிக், ஹைப்பர்சோனிக், உய்கூர் முஸ்லிம், வர்த்தகம் உட்பட பல பிரச்சனைகள் உள்ள நிலையில் தற்போது சீனா இராணுவ தளங்கள் அமைக்க முயற்சிக்கும் நாடுகளுக்கெல்லாம் சென்று அதற்கு முட்டுகட்டை போடுகிறது. பசுபிக் நாடான சாலமன் தீவிலும் சீனாவுக்கு எதிராக தற்போது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read: உயிரியல் போருக்கு தயாராக வேண்டும்.. BIMSTEC மாநாட்டில் பிபின் ராவத் எச்சரிக்கை..

Leave a Reply

Your email address will not be published.