இன்னும் 3 மாதத்தில் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும்.. டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை..

குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடிந்த உடன் சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 28 வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அந்த ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த உடன் சீனா தைவன் மீது தாக்குதல் நடத்தும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தான் பதவியில் இருந்து வெளியேறிய பிறகு சீனாவின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான் அமெரிக்காவின் அதிபராக இருந்த வரை தைவானின் வான் பரப்பில் சீனா அத்துமீறி நுழைந்ததே இல்லை. ஆனால் ஜோ பிடன் ஆட்சிக்கு வந்த பிறகு சீனா தைவான் வான் பரப்பில் தினமும் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்து வருகிறது.

நான் இருந்தவரை சீனாவுடன் கடுமையான போக்கை கையான்டதால் சீனா தைவான் வான் பரப்பில் நுழையவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவில் பலவீனமான ஆட்சி இருப்பதால் சீனா அதனை மதிப்பதே இல்லை என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் இன்னும் மூன்று மாதத்தில் சீனா தைவானை கைப்பற்ற தாக்குதல் நடத்தும் எனவும் ட்ரம்ப் கணித்துள்ளார்.

அமெரிக்காவின் 45 ஆவது தளபதியாக இருந்ததால் தன்னால் இதனை கணித்து சொல்ல முடியும் என ட்ரம்ப் கூறினார். ஏனென்றால் அமெரிக்க அதிபர் தான் கூட்டு பாதுகாப்பு படைகளின் தளபதி ஆவார். நவம்பர் மாதத்தில் மட்டும் சீனா தைவானின் வான் பரப்பில் 159 முறை அத்துமீறி நுழைந்துள்ளது. இது இரண்டாவது அதிகபட்சமாகும்.

Also Read: சாலமன் தீவில் சீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்.. சைனா டவுன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

தைவானை உரிமை கொண்டாடி வரும் சீனா, தேவைப்பட்டால் வலுகட்டாயமாக தைவான் இணைக்கப்படும் என கூறியுள்ளது. ஒரே சீன கொள்கையை எதிர்க்கும் சாய் இங்-வென் 2016ல் ஆட்சி வந்த பிறகு சீனா மற்றும் தைவான் இடையே மோதல் மேலும் அதிகரித்து வருகிறது. சீனாவை எதிர்கொள்ள தைவான் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் கூட்டணியை வலுபடுத்தி வருகிறது.

Also Read: ஐக்கிய அமீரகத்தில் அந்நாட்டிற்கு தெரியாமலேயே ரகசியமாக கடற்படை தளம் அமைத்து வரும் சீனா..

தைவான் மீது தாக்குதல் நடத்தினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்து கொள்ள முடியாது, இதனை சீனா புரிந்து கொள்ள வேண்டும். தைவானை தாக்கினால் சீனா மீது தாக்குதல் நடத்தப்படும் என முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து சீனாவில் உள்ள ஜப்பான் தூதரை அவசர கூட்டத்திற்கு அழைத்து சீனா எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்பின் இந்த கணிப்பு நடக்குமா என குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த உடன் தெரியவரும்.

Also Read: சீனாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் லிதுவேனியா. தைவானில் தூதரகத்தை திறக்க முடிவு.. எச்சரிக்கும் சீனா.

Leave a Reply

Your email address will not be published.