சீனா தைவான் பதற்றம்: தைவானுக்கு வழங்க வேண்டிய ஆயுதங்களை தாமதமாக்கும் அமெரிக்கா..?

சமீபத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவான் செல்ல உள்ளதாக அறிவித்த நிலையில், நெருப்புடன் விளையாட வேண்டாம் என சீனா நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் தைவான் தன்னை பாதுகாத்து கொள்ள தேவையான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்காக உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்கா தைவானுக்கு முக்கிய இராணுவ ஆயுதம் வழங்குவது தாமதமாகும் என கூறப்படுகிறது.

2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கு இடையில் 40 பீரங்கி அலகுகள் தைவானுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடினமான விநியோக நிலைமைகள் காரணமாக 2026 ஆம் ஆண்டு தான் விநியோகம் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் மார்ச் 2026 ஆம் ஆண்டுக்குள் தைவான் 250 ட்டிங்கர் தலையிலிருந்து வான் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

மேலும் கூடுதலாக தைவான் அமெரிக்காவின் 66 F-16 போர் விமானங்களையும் ஆர்டர் செய்துள்ளது. அவை 2026 ஆம் ஆண்டுக்குள் வரவேண்டிய நிலையில் அந்த விமானமும் தாமதமாகும் என கூறப்படுகிறது. ஆயுதங்களை ஆர்டர் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஆயுதங்களை வாங்குவதற்கான பிற விருப்பங்களையும் ஆராய்ந்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே. சீனா தைவானை தாக்கினால் ஜப்பான் தைவானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கும் என கூறியிருந்தார். சமீபத்தில் அவர் சுட்டுக்படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஜப்பானும் அமெரிக்காவும் தைவானுக்கு வழங்கி வரும் ஆதரவை படிப்படியாக குறைத்து வருகின்றன.

ஜப்பானின் வெளியுறவு கொள்கை தற்போது அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவும் மற்ற 12 நாடுகளும் இந்தோ-பசுபிக் பொருளாதார கட்டமைப்பு (IPEF) என அழைக்கப்படும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த வர்த்தக ஒப்பந்தம் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

13 IPEF நாடுகளில் அமெரிக்காவை தவிர மற்ற நாடுகள் உலக பொருளாதாரத்தில் 40 சதவீத பங்கை கொண்டுள்ளன. அதில் மற்ற நாடுகளான ஆஸ்திரேலியா, புருனே, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த IPEF கூட்டமைப்பில் தைவானும் இணைய முயன்ற நிலையில் அமெரிக்காவின் தலையீட்டால் தைவான் IPEF கூட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது சீனாவிற்கு ஆதரவான நிலைபாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது. தற்போது சீனா மற்றும் தைவான் இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா திட்டமிட்டு ஆயுதங்களை தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.