பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்கப்பல் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வழங்கியுள்ள சீனா..

இந்திய கடற்படையை எதிர்கொள்ளும் வகையில் பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்கப்பலை சீனா வழங்கியுள்ளது. ஷாங்காய் நகரில் நடந்த விழாவில் இந்த அதிநவீன போர் கப்பல் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டதாக CSSC தெரிவித்துள்ளது.

இந்த போர்கப்பலுக்கு PNS துக்ரில் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கப்பலை சீனாவை சேர்ந்த சைனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்ரேஷன் பில்டிங் (CSSC) என்ற நிறுவனம் கட்டமைத்துள்ளது. இந்தியாவின் கடற்படையோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தானின் கடற்படை மற்றும் கடற்பரப்பு மிகவும் குறைவு.

இதனால் இந்தியாவை சமாளிக்க பாகிஸ்தான் தனது கடற்படை வலிமையை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்திய நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தான் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

இதனால் தனது பாதுகாப்பை பலபடுத்தவும், கடற்படை திறனை அதிகரிப்பதற்காவும் கடந்த 2017 ஆம் ஆண்டு 054A/P வகையை சேர்ந்த நான்கு போர்கப்பல்களை தயாரிக்க சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தற்போது PNS துக்ரில் போர் கப்பல் பாகிஸ்தான் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுத்தவிர 8 நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பிற்கும் பாகிஸ்தான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த PNS துக்ரில் போர்கப்பலில் அதிநவீன ரேடார் அமைப்பு மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து JF-17 தண்டர் என்ற போர் விமானத்தையும் தயாரித்துள்ளன.

பாகிஸ்தான் கடற்படையின் கப்பல்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், போர் விமானம் மூலம் இந்திய கடற்படையை தாக்குவதற்காக பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து CM-400AKG என்ற கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை அதிக அளவில் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏவுகணையை சீனாவின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. JF-17 போர் விமானத்தில் பயன்படுத்தும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற கப்பல் எதிர்ப்பு ஏவுகணை போல் இல்லாமல் இந்த CM-400AKG ஏவுகணை போர்விமானத்தின் மூலம் 35,000 அடி உயரத்தில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read: பாலைவனத்தில் போர்கப்பலை மறைத்து வைத்து இரகசியமாக போர்பயிற்சியில் ஈடுபடும் சீனா..

இந்த ஏவுகணை 2000 கிலோ எடையும், 150 மைல் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. இதனை இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைக்கு சமமானது என பாகிஸ்தான் கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. அதி உயரத்தில் பயன்படுத்தப்படுவதால் பாகிஸ்தானின் இந்த ஏவுகணை எளிதில் ரேடாரில் தென்பட்டுவிடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். பொதுவாக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கடல் பரப்பில் இருந்து சில அடி உயரத்தில் மட்டுமே சென்று தாக்குதல் நடத்த கூடியவை.

Also Read: எதிரிகளின் விமானதளங்களை தாக்கி அளிக்கும் SAAW ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

அப்போதுதான் எதிரி நாடுகளின் ரேடாரால் அந்த ஏவுகணை வருவதை கண்டறிய இயலாது. பாகிஸ்தானின் இந்த ஏவுகணை அதிக உயரத்தில் செயல்படுவதால் எளிதில் ரேடாரால் கண்டறிந்து விடலாம். ஆனால் CM-400AKG என்ற தனது பழைய ஏவுகணைகளை சீனா பாகிஸ்தானிடம் தள்ளி விடுவதாக விவரம் அறிந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Also Read: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘துஷீல்’ போர்கப்பல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.