இந்திய கடற்படையை உளவுபார்க்க திட்டமா? இந்தோனேசியா அருகே கைபற்றப்பட்ட சீன நீர்மூழ்கி ட்ரோன்
இந்தோனேசியா அருகே கைப்பற்றபட்ட இந்த ட்ரோன்கள் இந்திய கடற்படையை உளவு பர்ப்பதற்காக சீனாவால் அனுப்ப பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு இடையில், ஆஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி ட்ரோனை இந்தோனேசிய மீனவர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.
இந்த நீர்மூழ்கி ட்ரோன் (UUV) கிறிஸ்மஸுக்கு முன்பு தெற்கு சுலவேசியில் உள்ள செலாயர் தீவுக்கு அருகே மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது.
டிசம்பர் 20 ம் தேதி உள்ளூர் மீனவர் ஒருவரால் யு.யு.வி தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டது, ஆனால் ஆறு நாட்களுக்குப் பிறகு தான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தோனேசிய ஊடகங்களின்படி, கைப்பற்றப்பட்ட ட்ரோன் நீளம் 225 செ.மீ ஆகும், இதில் 50 செ.மீ இறக்கைகள், வால் 18 செ.மீ மற்றும் 93 செ.மீ நீளமுள்ள ஆண்டனாவும் உள்ளது.
மேலும் கேமரா மற்றும் ஆண்டெனா பொருத்தப்பட்ட டார்பிடோ வடிவ ட்ரோன் டிசம்பர் 20 அன்று செலாயர் தீவுக்கு அருகே மீனவர்கள் வலையில் சிக்கியபோது அது ஒளிர்ந்ததாகவும் அதன் சென்சார்கள் இயங்கியதாகவும், அது இன்னும் செயலில் இருப்பதாக இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ட்ரோன் இப்போது இந்தோனேசிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு மக்காசரில் உள்ள 6 வது பிரதான கடற்படை தளத்தில் வைக்கப்பபட்டுள்ளது. தற்போது அது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்தோனேசியாவில் இந்த யுயுவி கிளைடர்கள் இதுவரை 3 முறை மீட்கப்பட்டுள்ளதாக நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் எச் ஐ சுட்டன் தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, சீனா விங் (ஹையி) கிளைடர் எனப்படும் இந்த ட்ரோன்களை நீருக்கடியில் இந்தியப் பெருங்கடலில் நிறுத்தியுள்ளதாகவும், இவை பல மாதங்களாக இயங்கக்கூடியது மற்றும் கடற்படை உளவுத்துறை நோக்கங்களுக்காக அவற்றை பயன்படுத்த முடியும் என கூறியுள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு கூறுகையில், சுட்டன், சீனர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த கடல் கிளைடர்கள் (யுயூவி), 2019 டிசம்பரின் நடுப்பகுதியில் ஏவப்பட்டு இருக்கலாம் எனவும், பின்னர் அவை பிப்ரவரியில் மீட்கப்பட்டன எனவும் கூறியுள்ளார். அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி, சுட்டன் தனது அறிக்கையில், இந்த கிளைடர்கள் அமெரிக்க கடற்படையால் பயன்படுத்தப்பட்டவை போலவே இருப்பதாகவும், அவற்றில் ஒன்று “கடந்து செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பாக வழிகாட்ட பயன்படுத்திருக்கலாம் எனவும், மேலும் இந்த கிளைடர் 2016 ல் பெய்ஜிங்கால் கைப்பற்றப்பட்டது என கூறியுள்ளார்.
சீனா இப்போது இந்த வகையான ட்ரோன்களை (UUV) இந்திய பெருங்கடலில் பெருமளவில் பயன்படுத்துகிறது என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆர்க்டிக்கில் ஒரு ஐஸ் பிரேக்கரில் சீனா தனது கிளைடரை நிறுத்தியுள்ளது என்று சுட்டன் கூறியுள்ளார். இந்தியப் பெருங்கடலில் வைக்கப்பட்டுள்ள இந்த சீன கிளைடர்கள் கடல்சார் தரவுகளை சேகரிப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் அவை தீங்கானவை என்றாலும், பொதுவாக கடற்படை புலனாய்வு நோக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படுவதாக கூறினார்.