உய்கூர் முஸ்லிம்களின் உடல் உறுப்புகளை எடுத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் சீனா.. அதிர்ச்சி ரிப்போர்ட்..

சீனாவின் ஜின்ஜியாங் மகாணத்தில் உய்கூர் முஸ்லிம், இன மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிராக சீன அரசு மனித உரிமை மீறலில் ஈடுபடும் புதிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹெராலட் சன் பத்திரிக்கை சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஜின்ஜியாங்கில் உள்ள முகாம்களில் உள்ள உய்கூர் முஸ்லிம் மற்றும் மத, இன சிறுபான்மையினரின் உடல் உறுப்புகளை வலுகட்டாயமாக எடுத்து கருப்பு சந்தையில் விற்பனை செய்து வருவதாக அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருப்பு சந்தையில் ஆரோக்கியமான கல்லீரல் 160,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகிறது. இதன் மூலம் சீனாவுக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் வருவதாக கூறப்படுகிறது.

இது போன்ற குற்றச்சாட்டுகள் சீனாவின் மீது அடிக்கடி கூறப்படுகிறது. சீனாவில் உள்ள உய்கூர்கள், முஸ்லிம்கள், திபெத்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீது சீனா அடக்குமுறையை கையாளுகிறது. ஏற்கனவே சீனா உய்கூர் முஸ்லிம்களை சிறையில் அடைத்து வைத்து சித்தரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அங்கு குரான் வைத்திருப்பது சட்டவிரோதம். மசூதிகளும் இடிக்கப்பட்டுள்ளன.

மேலும் திபெத்திலும் திபெத்திய ஆண்கள் பயிற்சி முகாம்களுக்கு வலுகட்டாயமாக அனுப்பப்படுகின்றனர். பிறகு சீன ஆண்கள் வீட்டில் தனியாக இருக்கும் திபெத்திய பெண்களுடன் தங்கி சீன மொழியை பயிற்றுவிப்பதாகவும், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

சீனா தற்போது உடல் உறுப்புகளை விற்பது தொடர்பான புகார்கள் ஐ.நா மனித உரிமை நிபுணர்களுக்கு (UNHRC) அனுப்பப்பட்டுள்ளது. சீனாவில் உய்கூர் உட்பட மத சிறுபான்மையினர் வலுகட்டாயமாக இரத்த பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட் மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு கைதிகளின் அனுமதி இல்லாமலேயே பரிசோதித்து வருவதற்கான நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

உய்கூர் முஸ்லிம்களிடையே கட்டாய உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளதாகவும் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் உய்கூர் தடுப்பு முகாம்களுக்கு அருகிலேயே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீன டெலிகாம் நிறுவனங்களுக்கு தடை.. அமெரிக்கா அதிரடி..

மருத்துவமனைகளில் மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது நீண்ட காலமாக நடந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கு இடைபட்ட காலத்தில் 80,000 மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள் கடத்தப்பட்டு சீனா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ASPI அறிக்கையை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read: சீனாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட உய்கூர் முஸ்லிம் இன பெண்..

மேலும் இதேபோல் தைவான் செய்திதாளும் உய்கூர் முஸ்லிம்களிடம் இருந்து 84 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை சீன அரசு பறிமுதல் செய்துள்ளதாக ஹெரால்ட் சன் பத்திரிக்கை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது. சிறுபான்மை மக்களிடம் இருந்து இதயங்கள், சிறுநீரகங்கள், கல்லீரல்கள் மற்றும் கண்கள் உட்பட எடுக்கக்கூடிய பாகங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு கருப்பு சந்தையில் சட்ட விரோதமாக விற்கப்படுவதாக UNHRC தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீனாவிடம் அறிக்கை கேட்டபோது தரவு இல்லாத அறிக்கையை சீனா கொடுத்துள்ளதாகவும், சரியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே சீனா மீது நடவடிக்கை எடுக்க முடியும் என UNHRC கூறியுள்ளது. இந்த குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டால் சீனா பொருளாதார தடை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை உலக நாடுகளிடம் சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

Also Read: பின்னடைவில் சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டம்.. சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து வரும் ஆப்ரிக்க நாடுகள்..

Leave a Reply

Your email address will not be published.