பாகிஸ்தானிடம் கடனை திருப்பி கேட்கும் சீனா.. திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான்..

சீனா பாகிஸ்தானிடம் தனக்கு வழங்க வேண்டிய கடனை திருப்பி கேட்டுள்ள நிலையில் அதனை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் சீனாவை கேட்டுக்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்துள்ள நிலையில் சீனாவின் கடன் பாகிஸ்தானிற்கு மேலும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

சீனா பெல்ட் அண்ட் ரோட் திட்டம் உட்பட பல திட்டங்களுக்காக பாகிஸ்தானுக்கு அதிக அளவில் கடன் கொடுத்துள்ளது. பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 50 சதவீதம் சீனாவும் 50 சதவீதம் பாகிஸ்தானும் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானிடம் திட்டத்திற்கான தொகை இல்லை என்பதால் அதனை சீனா கடனாக கொடுத்துள்ளது.

தற்போது சீனாவின் இந்த திட்டத்திற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆங்காங்கே சீனர்கள் கொல்லப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் இந்த திட்டம் தற்போது தற்காலிகமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் சீனாவிற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் 50 சதவீத தொகையை சீனா பாகிஸ்தானிடம் கேட்டுள்ளது.

பெல்ட் அண்ட் ரோட் திட்டம் சீனா உடையது. அதற்கு சீனாவே கடன் கொடுத்து தற்போது பாகிஸ்தானை கடன் வலையில் சிக்க வைத்துவிட்டது. இதே போன்ற ஒப்பந்தத்தை தான் சீனா இலங்கையுடன் போட்டது. ஹம்பந்தோட்டா துறைமுக பணிக்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. கடனை திருப்பி கொடுக்க முடியாததால் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்துவிட்டது சீனா.

தற்போது அதேபோல் பாகிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தை சீனா கைப்பற்ற உள்ளதாகவும் பேச்சு அடிப்பட்டது. குவாடர் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் அங்கி இருந்து அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு எளிதாக சரக்குகளை கொண்டு செல்ல முடியும். மேலும் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் குவாடர் துறைமுகத்தை பயன்படுத்தி கொள்ள முடியும் என சீனா திட்டம் போட்டது.

ஆனால் குவாடர் துறைமுகத்தில் பணியை மேற்கொள்ள விடாமல் பாகிஸ்தான் மக்கள் மற்றும் பலுசிஸ்தான் கிளர்ச்சி படைகள் சீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் துறைமுகத்தை கைப்பற்றினாலும் தனக்கு நஷ்டமே ஏற்படும் என்பதால் தற்போது சீனா பாகிஸ்தானிடம் கடனை திருப்பி கேட்டுள்ளது. ஏற்கனவே FATF பாகிஸ்தானை சாம்பல் நிறபட்டியலில் வைத்துள்ளது. IMF மற்றும் உலக வங்கி ஆகிய நிதி நிறுவனங்கள் பாகிஸ்தானின் மதிப்பீட்டை குறைத்துள்ளன.

பாகிஸ்தானின் அரசியல் விஞ்ஞானி, பொருளாதார நிபுணர் மற்றும் நிதி ஆய்வாளரான பரூக் சலீம் கூறுகையில், சர்வதேச கடனை திருப்பி செலுத்துவதில் பாகிஸ்தான் ஒருபோதும் தவறியதில்லை என கூறினார். மேலும் பாகிஸ்தான் தற்போது சீன வங்கிகளுக்கு $9.1 பில்லியன் கடன்கள், $1 பில்லியன் யூரோபாண்ட்/சுக்குக் மற்றும் IMFன் $1 பில்லியன் உட்பட பல கடன்களை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மேலும் $11.3 பில்லியன் பாரிஸ் கிளப்பிற்கும், $33.1 பில்லியன் பலதரப்பு நன்கொடையாளர்களுக்கும், $12 பில்லியன் யூரோபாண்ட் மற்றும் சுக்குக் போன்ற சர்வதேச பத்திரங்களுக்கும் கடன்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவிடம் இருந்து தலா 3 பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு வைப்பு தொகையும் பாகிஸ்தான் பெற்றுள்ளது.

Also Read: பாகிஸ்தானை தொடர்ந்து அதன் நட்பு நாடான துருக்கியையும் சாம்பல் நிற பட்டியலில் சேர்த்தது FATF..?

சவுதி அரேபியாவிடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர் வைப்புத்தொகையும் வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தானின் கடன் 91 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018 ஜீன் மாதம் நாட்டின் மொத்த கடன் 142 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2021 ஆகஸ்டு மாதத்தில் 233 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

Also Read: இன்னும் 3 மாதத்தில் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தும்.. டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை..

இந்த காலக்கட்டத்தில் உள்நாட்டு கடன் 91 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 148 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அதே காலக்கட்டத்தில் வெளிநாட்டு கடன் 48.3 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 83 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இந்த கடன்களுக்கு வட்டியாக மட்டும் பாகிஸ்தான் 42.4 பில்லியன் அமெரிக்க டாலரை செலுத்தி உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேநிலை நீடித்தால் பாகிஸ்தான் கூடிய விரைவில் திவாலாகி விடும். இதனை தடுக்க ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read: சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்திற்கு எதிராக களமிறங்ரும் ஐரோப்பிய யூனியன்..

Leave a Reply

Your email address will not be published.